Asianet News TamilAsianet News Tamil

கருணாசை சிறையில் சந்தித்த டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்…. பின்னணி என்ன ?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல் துறை அதிகாரிகளை மிரட்டும் வகையிலும், சாதி மோதலைத் தூண்டிவிடும் வகையிலும் பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கருணாஸ் எம்எல்ஏவை டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நேரடியாக சந்தித்துப் பேசினர்.

ttv support mlas meet karunas in vellore jail
Author
Vellore, First Published Sep 26, 2018, 8:54 AM IST

கடந்த 16 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அ.தி.மு.க அரசைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்ததற்காக முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ-யுமான கருணாஸை கைது செய்த போலீஸ் அவரை  வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். முதலில் புழல் சிறையிலும்இ பின்னர் பேலூர் சிறையிலும் அவர் அடைக்கப்பட்டார். 

ttv support mlas meet karunas in vellore jail

இந்நிலையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள கருணாஸ் எம்எல்ஏவை  தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சோளிங்கர் பார்த்திபன் மற்றும் குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

ttv support mlas meet karunas in vellore jail

சிறையில் உள்ள கருணாஸை சந்திக்க வந்தபோது விசாரணை கைதிகளைச் சந்திக்க அனுமதில்லை எனக் கூறிய சிறை அதிகாரிகள் பின்னர் அவர்கள் இருவரும் வழக்கறிஞர்கள் என்ற முறையில் மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை சந்திக்க அனுமதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கருணாசை சந்தித்து அரை மணி நேரம் பேசினர்.. 

ttv support mlas meet karunas in vellore jail

அரை மணி நேரம் சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த எம்.எல்.ஏ-க்கள் பார்த்திபன் மற்றும் ஜெயந்தி பத்மநாபன் ஆகியோரிடம் எதற்காக கருணாசை சந்தித்தீர்கள், என்ன பேசினீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

கருணாஸை சக சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் நண்பர் என்ற முறையிலும் நாங்கள் வழக்கறிஞர் என்ற முறையிலும் சந்தித்தோம் அவரை சந்தித்தோம் என அவர்கள் இருவரும் அங்கிருந்து நழுவிச் சென்றனர்..

Follow Us:
Download App:
  • android
  • ios