ttv dinakaran talks about vijayabaskar post
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். பலகோடி பணத்துக்கான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது. இதனால், அவரது பதவி பறிக்கப்படும் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அமைச்சர் தளவாய் சுந்தரம், விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ஆவணங்களை கொண்டு வந்து அழித்தார் என்பதில் உண்மை இல்லை. இது கட்டு கதையாக வருகிறது. இதுபற்றி வருமான வரித்துறையினர் புகார் கொடுத்துள்ளனர். அதை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம்.

வருமான வரித்துறையினரின் சோதனைக்கு பின், விஜயபாஸ்கரின் பதவி பறிக்கப்படும் என பேசுகிறார்கள். அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. நாங்கள் அமைச்சரவையை கலைக்க போதுவது இல்லை.
இந்த விவகாரம் ஆர்கே நகர் தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்தே வதந்தியாக வருகிறது. கடந்த 14ம் தேதி அதிமுக அலுவலகத்தில் அனைத்து அமைச்சருடன் பேசினோம்.

எனக்கு புத்தாண்டு வாழ்தது சொல்ல வந்தார்கள். அவர்களுடன் கட்சி சம்பந்தமான விஷயங்களை பேசினேன்.
ஆனால், அமைச்சர்களை மாற்றுவது குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. இதுபோல் பொய்யான தகவல்களை கூறி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
