Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடியுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை... நாங்க எதுக்கு டிராமா பண்ணணும்? குழப்பும் தங்க தமிழ்செல்வன்

TTV Dinakaran supporter Thanga Thamizhselvan Pressmeet
TTV Dinakaran supporter Thanga Thamizhselvan Pressmeet
Author
First Published Jun 18, 2018, 4:33 PM IST


எந்த சூழ்நிலையிலும், எந்த காரணத்துக்காகவும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வத்துடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை என தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்லும்போது, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் 3-வது நீதிபதியிடம் சென்றாலும் நியாயம் கிடைக்காது என்றார். மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றங்கள் கேலிக்கூத்தாகி விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். அரசை எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது கட்சித் தாவல் தடை சட்டம் பாயவில்லையே ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர் பதவி வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும், என்னிடம் வரும் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்று ஆதங்கம் தெரிவித்திருந்தார். 18 எம்.எல்ஏ.க்களும் ராஜினாமா செய்து விட்டு, அந்தந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் என்றும் அவர் கூறியிருந்தார்.18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் 3-வது நீதிபதியிடம் சென்றாலும் நியாயம் கிடைக்காது என்றார். மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றங்கள் கேலிக்கூத்தாகி விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். 

அரசை எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது கட்சித்தாவல் தடை சட்டம் பாயவில்யே ஏன்? எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர் பதவி வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னிடம் வரும் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. நான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன். ஆண்டிப்பட்டி தொகுதிக்கு எம்.எல்.ஏ., வேண்டும் என்பதற்காக நான் தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெற முடிவெடுத்துள்ளேன். 18 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்துவிட்டு, அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெற்று தேர்தலில் நின்று வெற்றி பெறுவேன் என்றார். துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் உட்பட எம்.எல்.ஏ.க்கள் 11 பேருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் எந்த தவறும் செய்யாமல் எங்களுக்கு பாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. பதவியை வாபஸ் பெறுவதுதான் என் விருப்பம் என்றும் அது குறித்து ஏற்கனவே டிடிவி தினகரனிடம் சொல்லிவிட்டேன் என்றும் கூறினார்.

நாங்கள் அதிமுகவில் சேர வேண்டும் என்று நினைத்திருந்தால் ஏன் இவ்வளவு சிரமங்களை சந்திக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை சசிகலாதான் முதலமைச்சராக்கினார். அவரையே கட்சியில் இருந்து நீக்கும்போதுதான் நாங்கள் வெளியேறினோம். ஊழல் செய்து பணம் சம்பாதிப்பது எங்களின் எண்ணம் இல்லை என்றும் தங்க தமிழ்செல்வன் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios