ttv dinakaran reply to kamalhassan comments against RK Nagar victory
கமல் டீசண்ட் மேன் என நினைத்தேன் என்னுடைய வெற்றியை தாங்கிக்கொள்ள முடியாத அவர் இப்படி மக்களை குற்றம் சாட்டுகிறார் தன் வெற்றி குறித்த கமலின் விமர்சனத்திற்கு தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.
கமலஹாசன் வார இதழ் ஒன்றில் எழுதி வரும் தொடரில் டி.டி.வி.தினகரனை கடுமையாக விமர்சனர் செய்துள்ளார். அதில் சென்னை ஆர்.கே.நகரில் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு பொது மக்களும் உடந்தையாக இருந்தது வேதனை அளிப்பதாகவும், திருடனிடம் பிச்சி எடுப்பது போல உள்ளதாகவும் தனது கருத்தை காட்டமாக கூறியிருந்தார்.

இந்நிலையில், கமல் ஹாசனின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற என்னை விமர்சனம் செய்வதாக நினைத்து கமல், ஆர்.கே.நகர் மக்களை விமர்சித்துள்ளார். இது அவரது வயதிற்கும் அனுபவத்திற்கும் மரியாதைக்கும் சரியான செயல் அல்ல. சினிமாவில் எழுதிக்கொடுத்து பேசும் வசனம் போல கமல் பேசியிருக்கிறார். கமல் ஹாசன் டீசண்ட் மேன் என நினைத்தேன் ஆனால் அவர் இப்படி பேசியிருப்பது அவரின் தரத்தை குறைத்திருக்கிறது.

பணத்திற்காக மக்கள் வாக்களித்திருந்தால், ஆர்.கே.நகரில் இரட்டை இலை தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அரசின் மீதான அதிருப்தியை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதியாக ஆர்.கே.நகர் மக்கள் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். ௨௦ ரூபாய் டோக்கனை நம்பியா வாக்களிப்பார்கள்? ஆர்.கே.நகரில் எனது வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் மக்களை குற்றம்சாட்டுகின்றனர். சினிமா வசனம் போல பேசியிருக்கிறார். கமலுக்கு அரசியல் தெரியவில்லை. மக்களை குற்றம்சுமத்தும் அவர், அரசியல் பற்றி தெரியாமல் அரசியலில் தாக்குப் பிடித்து நிற்க முடியுமா? என தினகரன் பேசியுள்ளார்.
