ttv dinakaran press meet
அதிமுகவை ஒன்றிணைக்கவே அமைதியாக இருந்தததாகவும், அமைதியாக இருந்தததை அடங்கிப் போவதாக யாரும் நினைக்க வேண்டாம் என அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக அம்மா அணியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை டிடிவி தினகரன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,.
அதிமுக இயக்கம் ஒன்றுபடும் என்றும் நாமாளுமன்ற தேர்தலில் தங்களுடைய வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம். விரைவில் அமைச்சர்களுக்கு பயம் நீங்கி எங்களுடன் இணைவார்கள் என்றும் தினகரன் தெரிவித்தார்.
தற்போது நடைபெறும் அரசு சசிகலா கைகாட்டியதால் தான் நடந்து கொண்டிருக்கிறது. கட்சியில் இருந்து யாரையும் நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கே உள்ளது. கட்சியின் துணை பொதுச்செயலாளர் தலைமை அலுவலகம் செல்வதை யாரும் தடுக்க முடியாது என அவர் தெரிவித்தார்.
ஜெயக்குமார் மீனவர் பிரிவு செயலாளர் தான், அவரை சசிகலா தான் நியமித்தார என்று தெரிவித்த தினகரன், ஜெயலலிதா வகுத்த பாதையில் சென்றால் 5 ஆண்டுகள் ஆட்சியை அரசு நிறைவு செய்யும் என்றும் கூறினார்.
அதிமுகவை ஒன்றிணைக்கவே அமைதியாக இருந்தததாகவும், அமைதியாக இருந்ததை அடங்கிப் போவதாக யாரும் நினைக்க வேண்டாம் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
