தனக்கு அடுத்து அமமுகவில் மிகவும் பசையுள்ள நபராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்த செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்றதால் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டார் டி.டி.வி.தினகரன். 

இதனால் உள்ளுக்குள் அழுதாலும் அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் எங்கிருந்தாலும் வாழ்க என சிரித்துக் கொண்டே வாழ்த்துகிறார். இப்போது அடுத்த நிலையில் உள்ள முக்கிய நபர்களிடம் செந்தில் பாலாஜியின் பொறுப்புகளை ஒப்படைத்து இருக்கிறார். ஆனால், அவர்களோ ’’பொறுப்பு ஏத்துக்கிறோம்.. செலவுகளை நீங்கள்தான் கவனித்துக் கொள்ள வேண்டும்’’ எனக் கூறிய மாஜி அமைச்சர்களும், செல்வாக்குள்ள எம்எல்ஏக்களும் கைவிரித்து விட்டார்களாம்.

 

அதனால் உள்ளே இருக்கும் நோட்டுக்களை தூசு தட்டி எடுக்கலாம் என  திட்டமிட்டிருந்தார் டி.டி.வி.தினகரன். ஆனால் அவரது மனைவி அதற்கு தற்போது தடை போட்டிருப்பதாக கூறுகிறார்கள்.  ’’சசிகலா சிறையில் இருந்து வெளியில் வரும் வரை பணத்தை பெரிய அளவில் தரமுடியாது. கையில் இருப்பதை வைத்து காலத்தை ஓட்டுங்கள். தேர்தல் வரும்போது நிதி திரட்டிக் கொள்ளலாம்’’ என கிடுக்குப்பிடி போட்டு வருகிறாராம். 

இப்போதைக்கு அவர் நிலைமையே ஆட்டம் காணுவதால், கட்சி தொண்டர்களும் அப்செட்டாகி கிடக்கிறார்கள். இதனை வெளியேயும் சொல்ல முடியாமல், உள்ளேவும் வைத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறார் டி.டி.வி.தினகரன்.