ஐடி விங் என்ற பெயரில் பொறுக்கிகளை  வைத்து கட்சி நடத்துகிறார்  டிடிவி தினகரன் என பெங்களூரு புகழேந்தி அமமுக மீது பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு ஓட்டல் ஒன்றில் சில கட்சித் தொண்டர்களை சந்தித்த புகழேந்தி டிடிவி தினகரனை பற்றி பேசியது வீடியோவாக வெளியாகி அமமுகவில் டிடிவி தினகரன் மற்றும் புகழேந்தியிடையே பிளவை ஏற்படுத்தி உள்ளது. புகழேந்தி  அமமுகவிலிருந்து நீக்கப்பட போகிறார் என்ற தகவல் பரவலாக இருந்து வருகிறது.  ஆனாலும் இது வரையில் டிடிவி தினகரன் பெங்களூரு புகழேந்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதற்கு காரணம் ஜெயலலிதாவை போலவே சசிகலாவுடன் அவருக்கு நற்பெயர்  இருப்பதுதான் என சொல்லப்படுகிறது.  சிறையில் இருந்து திரும்பிவரும் வரை நம்பிக்கையோடு இருங்கள், வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சசிகலா புகழேந்தியிடம் சொல்லி விட்டுச் சென்றுள்ள அளவுக்கு நெருக்கம்.

அதனால், சின்னம்மாவின் விசுவாசியான புகழேந்தியின் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார் தினகரன் என்கின்றனர் அமமுகவினர். அதேபோல் ஒன்றன்பின் ஒன்றாக முன்னணி நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினால்  அதுகட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடும் என்பதாலும் கட்சியை வீழ்ச்சி பாதையில் கொண்டுசென்றுவிடும் என்பதாலும், புகழேந்தி விவகாரத்தில் நிதானமாக உள்ளார் டிடிவி தினகரன். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புகழேந்தி சமீபகாலமாக டிடிவி தினகரனின் நடவடிக்கைகள் கட்சியை ஒருங்கிணைத்து நடத்துவதாக தெரியவில்லை. அதற்கு மாறாக ஏதோ ஒரு திட்டத்துடன் அவர் செயல்படுகிறார் அவரின் திட்டந்தான் என்ன என்று புரியவில்லை என்றார்.

அமமுக அழிவிற்கு பல காரணங்கள் இருந்தாலும் அந்த கட்சியின் ’ஐடி’விங் மிக முக்கிய காரணமாக இருக்கும் என்றார். கட்சியிலிருந்து ஒருவர் மீது ஒரு குற்றச்சாட்டு வந்தால் அதை நிதானமாக விசாரித்து அனுகாமல், தான்தோன்றித்தனமாக வாய்க்கு வந்தையெல்லாம் சொல்லி, இல்லாதது பொல்லாத தை எல்லாம் எழுதி குறிப்பிட்ட நபரை வெளியேற்றுவதிலேயே  குறிக்கோளாக செயல்படுகின்ற