TTV Dinakaran hogged the limelight in the Assembly
ஜெயலலிதாதான் முழு ஃபோகஸாக இருப்பார் என தினகரனின் சகாக்கள் அடிக்கடி கூறியது நில்னைவிருக்கலாம்... ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவின் இடத்தை மட்டுமல்ல ஒட்டு மொத்த மீடியாவின் கவனத்தையும் தன்மீதே வைத்து கொண்டார் தினகரன்.
ஜெயலலிதா இருந்தபோது இப்படித்தான் நடந்தது. ஜெயலலிதா அப்பல்லோவில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கும் நாள்வரை ஒட்டு மொத்த மீடியாவின் கவனத்தையும் தன் மீதே வைத்திருந்தார். எத்தனை பேர் அதிமுகவில் இருந்தாலும் கூட ஃபோகஸ் என்னவோ ஜெயலலிதா மீதுதான் இருந்தது. ஜெயலலிதாவின் அதே முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சித் தலைவர் என அத்தனை பேர் இருந்தும் கம்பீரத்தோடு தனி ஒருவனாக வந்த தினகரன் மீதுதான் அனைவரின் கவனமும் உள்ளது.

இன்று பொதிகை டிவியில் ஆளுநர் உரை வாசிக்கும் நேரலையின்போதும் கூட அடிக்கடி கேமரா தினகரன் பக்கமும் போய் வந்தது முதல்வரை விட தினகரனை அதிகம் காட்டப்பட்டது.
தினகரன் முக்கியமான, கவனிப்புக்குரிய ஒரு உறுப்பினராக சட்டசபைக்குள் நுழைந்துள்ளார். காரணம், சூழல் அப்படி தனி ஒருவனாக சட்டசபைக்குள் நுழைந்துள்ளார் தினகரன். அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யபப்பட்டு விட்டனர். சட்டசபையில் தினகரன் தனித்துக் குரல் கொடுத்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அதனால் தானோ என்னவோ தினகரன் மீதே அனைவரின் கவனமும் பெற்றார். மேலும் தினகரனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? எப்போது செய்வார்? இதே மனநிலையில் தான் ஒட்டு மொத்த ஆட்சி எதிர்பாளர்கள் இருந்தார்கள்.

கிட்டத்தட்ட ஜெயலலிதாவுக்குக் கிடைத்த அதே முக்கியத்துவம் தினகரனுக்கு தாமாகவே கிடைத்துவிட்டது. அதிமுகவினரை விட தினகரன் மீதுதான் அனைவரின் பார்வையும் அதிகமாக விழுகிறது. சபைக்கு வெளியில் வீராப்பாக பேசிவரும் தினகரன் அதே ஸ்டாலில் கம்பீரமாக செயல்பட்டால் மீடியா மட்டுமல்ல தமிழகத்தின் கவனத்தையும் ஈர்ப்பார் என தெரிவிக்கின்றனர். எனவே, வழக்கம் போல அதிமுகவில் தனக்கு ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள், நம்பிக்கை வாக்கெடுப்பு நேரத்தில் ஸ்லீப்பர் செல்களுக்கு சார்ஜர் போடுவேன் என பேசாமல் அடுத்தடுத்த ஆக்ஷனில் குதித்தால் இன்னும் அதிகமாக சென்றடைவார்.
