Asianet News TamilAsianet News Tamil

தப்பித்தார் டி.டி.வி.தினகரன்... டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பாட்டியாலா நீதிமன்றத்தின் விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

ttv dinakaran case...delhi high court stays
Author
Tamil Nadu, First Published Mar 8, 2019, 12:29 PM IST

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பாட்டியாலா நீதிமன்றத்தின் விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தரப்புக்கு இடையே போட்டி நிலவியது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான புகாரில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் குற்றம் நிரூபிக்கபடாததால் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். ttv dinakaran case...delhi high court stays

இதுதொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி காவல்துறையினர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்திருந்தனர். இதனிடையே இந்த வழக்கை விசாரிக்க தடை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ttv dinakaran case...delhi high court stays

இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விசாரிக்க மார்ச் 20-ம் தேதி வரை இடைக்கால தடை விதிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios