காட்டுக்குள் இருக்க வேண்டியவர் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கடலுக்குள் இருக்க வேண்டியவர் என காட்டாக பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழக அரசியலில் மு.க.ஸ்டாலின், தினகரன் போன்ற சின்னத்தம்பிகள் நிறைய பேர் இருக்கின்றனர். ஆனால் 2 சின்னத்தம்பிகளும் ஆட்சியமைப்பது என்பது நடக்காத காரியம் என்று அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தில் டிடிவி தினகரன் திருச்சியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மத்திய அரசின் தவறான அணுகுமுறையால், பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும், தேர்தலை மனதில் வைத்துக் கொண்டே, பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என விமர்சனம் செய்தார்.  

மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து 5 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். காட்டுக்குள் செல்ல வேண்டியவர், என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தாங்கள் காட்டுக்கு செல்லத் தயார், ஆனால் ஜெயக்குமார் கடலுக்குள் இருக்க வேண்டியவர் என்றும் அவர் கடுமையான பதிலடியை கொடுத்துள்ளார்.