ttv dinakaran attack kamal in a press meet
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக நடிகர் கமலஹாசன் கூறுவது, அத்தொகுதி மக்களை அவமதிக்கும் செயல் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆனந்தவிகடனில் கமல்ஹாசன் எழுதும் 'என்னுள் மையம் கொண்ட புயல்' தொடரில் ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் பெற்ற வெற்றியை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்
இது குநித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், ஆர்.கே.நகரில் பணம் தான் வெற்றி பெற்றது என்றால் ஓட்டுக்கு ரூ.6,000 என்று மொத்தம் ரூ.120 கோடி கொடுத்தவர்கள்தானே வெற்றி பெற்றிருக்க வேண்டும் என தெரிவித்தார்
கமல்ஹாசன் என்ன எழுதி இருக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. பணம்தான் வெற்றி பெற்றது என்றால் ஆர்.கே.நகர் தொகுதி மக்களை கமல்ஹாசன் கேவலப்படுத்துகிறாரா? அவர்கள் மீது குறை சொல்கிறாரா? அவர் சொல்வது போல பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டருந்தால் அ.தி.மு.க. ஜெயித்திருக்க வேண்டும். அவர் எதை சொல்கிறார், என்ன சொல்கிறார் என்றே தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்..
தேர்தலில் பணம் பட்டுவாடா செய்தோம் என்று கமல்ஹாசன் எதை வைத்து சொல்கிறார்? அ.தி.மு.க.வாக இருக்கட்டும், தி.மு.க.வாக இருக்கட்டும் தோற்றுப் போனவர்கள் சொன்ன வார்த்தைதான் அது. ஆனால் இதை கமல்ஹாசன் சொல்கிறார் என்றால் அது அவரது தரத்தைதான் காட்டுகிறது என்று தினகரன் கூறினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில் கபடி ஆடலாம் என்று நடிகர் கமல்ஹாசன் நினைக்கிறார் அரசியலில் எடுபடமாட்டோம் என்ற அச்சத்தில் கமல்ஹாசன் இது போன்று பேசுகிறார். ஆர்.கே.நகர் தொகுதி மக்களை, கமல் பிச்சைக்காரர்களாகக் கருதுகிறாரா? கமல் நல்ல நடிகர். நல்ல சிந்தைனையாளர் என்று நினைத்தேன்.ஆனால், வாழ்க்கையில் நடிக்கிறார். கமல் மனநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டது என நினைக்கிறேன் என டி.டி.வி.தினகரன் மிகக் கடுமையாக பேசினார்.
