மதவெறியை தூண்டுவோருக்கு தமிழகத்தில் இடமில்லை என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ஹெச்.ராஜா மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார்.

இந்து மதம், தானே தன்னை பாதுகாத்து கொள்ளும், யாரும் பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை. தாம் சார்ந்த இயக்கத்தை வளர்க்கும் நோக்கில் ஹெச்.ராஜா செயல்படுகிறார். மத வெறியை தூண்டுவோருக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்றும் கூறியுள்ளார். 

மேலும் பெரியார் பிறந்தநாள் அன்று பெரியார் சிலை அவமதிக்கப்படுவது கண்டனத்திற்குரிய செயல் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு கால அவகாசம் தேவை, ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புவோம் என கூறினார். தமிழ்நாட்டை கலவர பூமியாக்க மாற்ற சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சதியை முறியடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.