- Home
- Tamil Nadu News
- அஜிதா ஆக்னஸ் தற்கொ*லை முயற்சி?.. விஜய்யை சந்திக்க முடியாததால் விபரீத முடிவு.. பரபரப்பு தகவல்!
அஜிதா ஆக்னஸ் தற்கொ*லை முயற்சி?.. விஜய்யை சந்திக்க முடியாததால் விபரீத முடிவு.. பரபரப்பு தகவல்!
மாவட்ட செயலாளர் பதவி கேட்டு விஜய் காரை மறித்தும், தவெக அலுவலகம் முன்பு தர்ணாவிலும் ஈடுபட்ட அஜிதா ஆக்னஸ் தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜிதா ஆக்னஸ் தற்கொலை முயற்சி
தவெகவில் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படவில்லை என்று போக்கொடி தூக்கிய தூத்துக்குடி தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னஸ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தவெக அலுவலகம் முன்பு தர்ணா போராடட்த்தில் ஈடுபட்டும் விஜய்யை சந்திக்க முடியாத விரக்தியில் இருந்து வந்த அஜிதா ஆக்னஸ் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தாகவும், இதன் காரணமாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
விஜய் காரை முற்றுகையிட்ட அஜிதா ஆக்னஸ்
மாவட்ட செயலாளர் பதவி வழங்காததால் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த அஜிதா ஆக்னஸ் தனது ஆதரவாளர்களுடன் விஜய்யின் காரை முற்றுகையிட்டார். ஆனால் விஜய் அவர்களை கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றார். தொடர்ந்து தவெக நிர்வாகிகளும், பவுனசர்களும் அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.
தவெக அலுவலகம் முன்பு தர்ணா
இதற்கிடையே தவெக இணைச்செயலர் சி.டி. நிர்மல் குமார் அஜிதா ஆக்னஸிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத அவர் தனது ஆதரவாளர்களுடன் தவெக அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
விஜய் வந்து பேசும் வரை நகர மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் தவெக தலைமை சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை ஏற்று போராட்டத்தை கைவிட்டார். ஆனால் இன்று அவர் தற்கொலை முயற்சி செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

