- Home
- Politics
- மு.க.ஸ்டாலினை ரவுண்டுகட்டும் நெருக்கடிகள்... கால்வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி.. திகிலில் திமுக..!
மு.க.ஸ்டாலினை ரவுண்டுகட்டும் நெருக்கடிகள்... கால்வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி.. திகிலில் திமுக..!
ஸ்கெட்ச் போட்டு வேலைகளை பார்த்து கொண்டு இருந்தாலும்கூட காணொளி வாயிலான கூட்டம் நடத்தி வந்தாலும் கூட தேர்தல் நெருங்க நெருங்க சில காட்சிகள் அவர்களுக்கு திகில் கொடுக்காமல் இல்லை.

தேர்தல் நெருங்க நெருங்க...
100 நெருக்கடிகள் 200 டார்கெட்டோடு சுற்றிச் சுற்றி எல்லாப் பக்கமும் வேகம் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள் திமுகவினர். ஒரு பக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு. திருநெல்வேலி பயணம், இன்னொரு பக்கம் மதுரை, கோவை பயணம். துணை முதலமைச்சர் உதயநிதி ஒரு பக்கம் மண்டல மாநாடு, இளைஞரணி மண்டல மாநாடு, திருவண்ணாமலைல அடுத்து திருப்பூரில் மகளிர் அணி மேற்கு மண்டல மாநாடு இப்படி ஸ்கெட்ச் போட்டு வேலைகளை பார்த்து கொண்டு இருந்தாலும்கூட காணொளி வாயிலான கூட்டம் நடத்தி வந்தாலும் கூட தேர்தல் நெருங்க நெருங்க சில காட்சிகள் அவர்களுக்கு திகில் கொடுக்காமல் இல்லை.
திமுகவுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில், அமைச்சர்கள் தரப்பினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். ஆனாலும் கூட அந்த பேச்சுவார்த்தை தோல்வி. இது முதல் திகில். திமுக வரலாற்றுல எப்பொழுதுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவர்களுக்கான ஒரு வலுவான வாக்கு வங்கியாக இருந்து வந்தவர்கள். ஆனால், இந்த ஆட்சியில் அது பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துக்கொண்டே இருக்கிறது.
தீவிரமாகும் அடுத்த கட்ட போராட்டம்
ஜனவரி 6ஆம் தேதியிலிருந்து அடுத்த கட்ட போராட்டத்தை நாங்கள் தீவிரப்படுத்துவோம். அதில் உறுதியாக இருக்கிறோம் என அறிவித்து இருக்கிறார்கள். இன்னொரு புறம் பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்காங்க செவிலியர்கள். அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார் சுகாதாரத்துறை அமைச்ச மா.சுப்பிரமணியன். கிட்டத்தட்ட 97.37 லட்சம் வாக்காளர்களுடைய பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதில் இறந்தவர்கள், இரட்டை வாக்கு என இந்த கணக்கெல்லாம் போக, கிட்டத்தட்ட ஒரு 65 லட்சம் வாக்காளர்கள் முகவரி மாறி இருக்கிறார்கள் என நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது ஒரு பெரிய சுமையாக ஆளும் திமுகவுக்கு மாறி இருக்கிறது.
சிக்கலாகும் வாக்காளர்கள் நீக்கம்
தங்களுடைய வாக்காளர்களைத்தான் டார்கெட் செய்து நீக்கி இருக்கிறார்கள். என்ன நடந்து கொண்டு இருக்கிறது என அதனை நோக்கி தீவிரமாக பயணித்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகளான எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் போன்றவர்களின் தொகுதிகளான எடப்பாடி, திருநெல்வேலி தொதிகளில் எல்லாம் குறைஞ்ச அளவில்தான் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சருடைய தொகுதி கொளத்தூர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடைய சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி இங்கெல்லாம் அதிக அளவில் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
திமுகவை டார்கெட் செய்திருகிறார்களா?
அப்படி என்றால் திமுகவை டார்கெட் செய்திருகிறார்களா? ஏனென்றால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 5000 வாக்குகள் குறைவிலான வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி கிட்டத்தட்ட 23 தொகுதிகளில் இருந்தது. அப்படியானால் ஐந்து ஆண்டு ஆட்சி மீது இயல்பாக மக்களுக்கு வரக்கூடிய கோபம் நூலிலையில் இந்த வெற்றி வாய்ப்பு பறிபோகும். இன்னொரு பக்கம் புதிதாக அரசியல் களத்துக்கு வந்திருக்கக்கூடிய விஜய் என பலரும் வாக்குகளை பிரித்தால் ஆட்சி அதிகாரத்துக்கான வாக்குகளை இழந்து விடக்கூடாது என எச்சரிக்கையாகவும் இருக்கிறார்கள் திமுகவினர். இதற்கடுத்து வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா ஆட்சி, திமுக ஆட்சி என தொடர்ந்து அட்டாக் செய்து வருகின்றன எதிர்கட்சிகள்.
மு.க.ஸ்டாலினுக்கு பெரும் சிக்கலைக் கொடுக்கும் காங்கிரஸ்
அவுட் செய்து புள்ளி விவரங்களோடு அட்டாக் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். இது ஒரு பெரிய ஒரு சுமையாகவும் திமுகவுக்கு மாறிக்கொண்டு இருக்கிறது.அதற்கடுத்து சில மாவட்டங்களில் எழுந்துள்ள உட்கட்சி மோதல்கள். எவ்வளவுதான் பஞ்சாயத்து செய்தாலும் இன்னும் புகைந்து கொண்டே இருக்கிறது. அதை விரைவில் சரி செய்ய வேண்டும். பலரும் தொகுதிகளுக்காக போட்டி போடுகிறார்கள். அவங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவிலை என்றால் வாய்ப்பு கிடைக்காதவர்கள் உள்ளடி வேலை செய்து விடுவார்களோ, அவர்களையெல்லாம் எச்சரிக்கை செய்து சரி செய்ய வேண்டும். வழக்கமான வேலை தான். தேர்தல் நெருங்குகிற போது இந்த முறை அது பெரிய பாதிப்பை ஏற்படுத்திடக்கூடாது. கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
இதற்கு அடுத்து மிக முக்கியமாக கூட்டணி கட்சிகள். அதி முதன்மையாக குடைச்சல் கொடுக்கிற கட்சியாக காங்கிரஸார் உள்ளனர். இப்போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கொஞ்சம் கூடுதலாகவே ஓங்கி ஒலித்துக் கொண்டு இருகிறார்கள். கம்யூனிஸ்டு கட்சிகளும் 20 சீட் கேட்டு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளன. இவையெல்லாம் மு.க.ஸ்டாலினுக்கு பெரும் சிக்கலாக மாறியுள்ளது.
