Asianet News TamilAsianet News Tamil

இப்போது போய் இப்படி செய்யலாமா..? மத்திய அரசுக்கு எதிராக குமுறும் டி.டி.வி.தினகரன்..!

கொரோனா பேரிடரைத் தொடர்ந்து சுமார் ஐந்து மாதங்கள் பொது முடக்கத்தால் முடங்கி இருந்த ஏழை மக்கள் இப்போதுதான் பொருளாதாரம் சார்ந்த இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். 

TTV Dinakaran appeals to stop tollgate tariff hike
Author
Tamil Nadu, First Published Sep 1, 2020, 12:53 PM IST

கொரோனா பேரிடர் முழுமையாக நீங்கும் வரை சுங்கக் கட்டணத்தில் ஏதேனும் சலுகை காட்டமுடியுமா என மத்திய அரசு சிந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார். TTV Dinakaran appeals to stop tollgate tariff hike

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.  தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன, இதில் 20 இடங்களில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’கொரோனா பேரிடரைத் தொடர்ந்து சுமார் ஐந்து மாதங்கள் பொது முடக்கத்தால் முடங்கி இருந்த ஏழை மக்கள் இப்போதுதான் பொருளாதாரம் சார்ந்த இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். TTV Dinakaran appeals to stop tollgate tariff hike

இந்த நேரத்தில் அவர்களை மறைமுகமாக பாதிக்கக்கூடிய வகையில் சுங்க கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது அம்மக்களை, மேலும் வேதனைப்படுத்தவே செய்யும். எனவே, உடனடியாக அந்த கட்டண உயர்வை திரும்பப்பெறவேண்டும். இன்னும் சொல்லப்போனால், கொரோனா பேரிடர் முழுமையாக நீங்கும் வரை சுங்கக் கட்டணத்தில் ஏதேனும் சலுகை காட்டமுடியுமா என மத்திய அரசு சிந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios