ttv dinakaran and divakaran will be arrest

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிக்கும் நிலையில் டி.டி.வி.தினகரனும், திவாகரனும் தங்களது இஷ்டப்படி செயல்பட்டு வருகிறார்கள் என குற்றம்சாட்டியுள்ள அமைச்சர் ஜெயகுமார், அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதமா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சியை வெளியிட்டார்.

நேற்று மன்னார்குடியில் பேசிய சசிகலாவின் தம்பி திவாகரன், ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி இறக்கவில்லை என்றும் 4 ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே இறந்து விட்டார் என்று பேசி அதிர்ச்சி அடையச் செய்தார்.

இது குநித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளகளிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார் , ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிக்கும் நிலையில் டி.டி.வி.தினகரனும், திவாகரனும் தங்களது இஷ்டப்படி செயல்பட்டு வருகிறார்கள் என குற்றம்சாட்டினார்.

ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து தினகரனும், திவாகரனும் அரசியல் செய்கிறார்கள் என்றும் . அவர்களை கைது செய்து, விசாரணை கமிஷன் விசாரித்தால் உண்மைகள் வெளிவரலாம் என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அப்போது ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை ஜனவரி முதல் வாரத்தில் மாலத்தீவுபகுதியில் தேடினோம் என தெரிவித்தார்.

காணாமல்போன மீனவர்கள் 15 நாட்களுக்குள் திரும்பாவிட்டால் அவர்கள் உயிரிழந்தவர்களாக கருதப்படுவர் என குறிப்பிட்ட அவர், ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை 194. உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 என புள்ளி விவரங்களை தெரிவித்தார்.

ரஜினி அரசியல் ஆன்மீகப்பயணம். கமல் அரசியல் பகுததறிவுப் பயணம் என்று குறிப்பிட்ட அமைச்சர் ஜெயகுமார், யார் எதை நோக்கி பயணித்தாலும், எங்களின் பயணம் மக்களை நோக்கியே உள்ளது என தெரிவித்தார்.