தமிழகத்தில் அடுத்த தேர்தலை நிர்ணயிக்கும் அரசியல் தலைவராக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உருவெடுத்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 3 பேர் டி.டி.வி.தினகரன் அணிக்கு ஆதரவாக உள்ளனர். இவர்களை நீக்க விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனை தடுக்க சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர திமுக தீர்மானித்து இருக்கிறது. 

அவ்வாறு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் சபாநாயகரால் நம்பிக்கை வாக்கெடுக்கும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.  ஆகையால் இந்த 3 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய முடியாது. இதனிடையே சட்டசபையில் எடப்பாடி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் டி.டி.வி.தினகரனுடன் மூன்று எம்.எல்.ஏக்கள் சேர்த்து எண்ணிக்கை 4 பேராக உள்ளது. 

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக வர வாய்ப்புள்ளது. தினகரன் ஆதரவு எண்ணிக்கை 6 ஆக இருக்கும். இந்த 6 பேரின் நிலைப்பாடு நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 

இதனால் டி.டி.வி.தினகரன் எடுக்க போகும் முடிவு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்கும். அவர் அதிமுக கட்சிக்கு ஆதரவு அளிப்பாரா? இல்லை திமுக ஆட்சி அமைக்க வழி விடுவாரா?  என்பது தெரியவில்லை. ஒருவேளை இருவருக்கும் ஆதரவு அளிக்காமல் போனால் அது பொதுத்தேர்தலை நடத்த வேண்டிய சூழலை உருவாக்கும்.

தன்னிடம் உள்ள இந்த பலத்தை வைத்து டி.டி.வி.தினகரன் அதிமுகவை தனது வழிக்கு கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது. சிலரை மட்டும் வெளியே அனுப்பிவிட்டு கட்சியையே தனது கட்டுக்குள் கொண்டு வரவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் அரசியலைப் உற்றுநோக்கி வருபவர்கள்.