அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து வருவதால் அமமுக அணியை கரைசேர்க்க என்ன செய்யலாம் என விவாதிக்கும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார் டி.டி.வி.தினகரன்.

ஆனாலும் அவருக்குள் இப்போது பெரும் கலக்கம் எழுந்துள்ளது. தங்க தமிழ்செல்வனை அடுத்து பழனியப்பன் கட்சி தாவ இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், யார் யார் எப்போது கிலி கொடுக்கப்போகிறார்களோ என்கிற அச்சத்துடனே இருக்கிறார் டி.டி.வி.தினகரன். திமுகவும், அதிமுகவும் அமமுகவின் அத்தியாயத்தை முடிக்காமல் விட மாட்டார்கள் போல. 

இது ஒருபுறமிருக்க தேர்தலில் அடைந்த தோல்விதான் அனைத்துக்கும் காரணம். கனிசமான வாக்குகளை பெற்றிருந்தால் நம்மை நோக்கி அதிமுகவினர் அணி வகுத்து வந்திருப்பார்கள். அதிமுகவை கைப்பற்றி ஆட்சியையும் கைப்பற்றி இருக்கலாம். இப்போது நிலைமை தலைகீழாகி கூட இருந்தவர்களும் கவிழ்ந்தடித்து ஓடுகிறார்கள். 

அவர்கள் ஓடினாலும் தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள். இது எல்லாவற்றுக்கும் காரணம் ஓட்டு மிஷினில் வைக்கப்பட்ட கோளாறுதான் காரணம். இங்கிருக்கும் மேல் மட்ட தலைவர்களும் சுயநலவாதிகளும் எப்போது வேண்டுமானாலும் கட்சி மாறலாம். ஆனால் தொண்டர்கள் இங்கு தான் இருப்பார்கள். முக்கால்வாசி பூத்துகளில் நமக்கு ஒரு ஓட்டுகூட விழல. என் வீடு இருக்கும் பூத்திலேயே 14 ஓட்டுதான் விழுந்திருக்கு. "அப்பா நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டீங்க?' ன்னு என் பொண்ணு கேட்குற அளவுக்கு நிலைமை ஆகிப்போச்சு. இத என்னன்னு சொல்ல, என்னத்த சொல்ல'’என விரக்தியில் புலம்பி வருகிறார் டி.டி.வி.தினகரன்.