குக்கர் சின்னம் கிடைக்காவிட்டாலும், மத்தியில் ஆளும் பாஜகவின் தடையை மீறி அமமுகவுக்கு பொதுச்சின்னம் கிடைத்ததே எங்களது வெற்றிதான் என அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 19 இடைத்தேர்தலுக்கும் ஒரே சின்னத்தை ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அமமுக மூத்த நிர்வாகி வெற்றிவேல் கூறும்போது, ‘’பொதுச்சின்னம் கிடைப்பதால் மக்களிடம் கொண்டு செல்ல சாதகமாக இருக்கும். வெற்றி வாய்ப்பு எந்த பாதிப்பும் இருக்காது. குக்கர் சின்னம் கேட்டு கிடைக்கவில்லை. மக்களிடம் எங்களுக்கு வரவேற்பு இருக்கும். மக்களிடம் எங்களுக்கான நியாயம் கிடைக்கும். 

தேர்தல் ஆணையம் பாஜக சொல்படிதான் செய்து கொண்டிருக்கிறது. இது எங்களுக்கு பின்னடைவு இல்லை. பொதுச்சின்னம் வழங்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதால் நாங்கள் போட்டியிட தயார். மக்களவை மற்றும் சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடும் தினகரன் அணியை சேர்ந்த 59 வேட்பாளர்களுக்கும் பொது சின்னம் ஒதுக்கப்பட்டாலும் அதை தேர்தல் நடைபெறும் கால கட்டத்திற்குள் பிரபலப்படுத்தி விடுவோம். 

பொதுச்சின்னம் கிடைத்துள்ளதால் மக்களிடம் கொண்டு செல்ல சாதகமாக இருக்கும். வெற்றி வாய்ப்பு எந்த பாதிப்பும் இருக்காது. குக்கர் சின்னம் கேட்டு கிடைக்கவில்லை. ஆனால், மக்களிடம் எங்களுக்கு வரவேற்பு இருக்கும். மக்களிடம் எங்களுக்கான நியாயம் கிடைக்கும்’’ என வெற்றிவேல் தெரிவித்துள்ளார். குக்கர் சின்னம் வழக்கில் தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கை ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், உச்சநீதிமன்றம் அமமுகவுக்கு பொதுச்சின்னம் அறிவித்துள்ளது பாஜகவின் சதியை முறியடித்து அமமுகவுக்கு கிடைத்த வெற்றி என அமமுகவினர் தெரிவித்துள்ளனர்.