டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் மற்றும் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி ஆகியோரது பதவியை பறிக்க நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளது அதிமுக தலைமை. அதன்படி 22 தொகுதி இடைத்தேர்தலில் நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்றால் அதிமுக ஆட்சி நீடிக்கும்.

 

டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோனது. தற்போது நடைபெற்றுள்ள 18 சட்டமன்றத்தேர்தல், அடுத்து நடைபெற உள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அதிமுக, மேலும் நான்கு எம்.எல்.ஏக்களின் பதவியை காவு வாங்கி ஆட்சியைத் தொடர திட்டமிட்டுள்ளது. 

18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தலும் மக்களவை தேர்தலோடு இணைந்து நடைபெற்றது. இந்த 18 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக ஐந்து இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதிமுகவுக்குத் தற்போது சபாநாயகரோடு சேர்த்து 114 எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். ஆக பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் நான்கு இடங்கள் தேவை. அதேவேளை டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகிய மூவரும், தமிமுன் அன்சாரி, ஆகியோர் அதிமுகவுக்கு எதிரான நிலையில் உள்ளதாகக் கூறி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளார்.

அதன்படி அதிமுகவின் பலம் 110 ஆகக் குறைந்துள்ளது. இந்த நான்கு இடங்களைச் சரிகட்ட கூடுதலாக நான்கு இடங்கள் என மொத்தம் 8 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறவேண்டும். இந்த நால்வரையும் தகுதி நீக்கம் செய்தால் தற்காலிகமாக அதேநேரம், 22 சட்டமன்றத் தொகுதிகளில் 4 இடங்களில் வென்றால் ஆட்சிக்கு இப்போதைக்கு பாதகம் இல்லை.

ஆகையால், இந்த நால்வரையும் பதவி நீக்கம் செய்தால் அடுத்து கள்ளக்குறிச்சி, விருத்தாச்சலம், அறந்தாங்கி, மற்றும் நாகபட்டினம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் வரை அதிமுக ஆட்சி நீடிக்கும். இதை காரணமாக வைத்தே இந்த நான்கு எம்.எல்.ஏக்களை பதிவிநீக்கம் செய்ய சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.