ஆளுநர் ஒப்புதல் கொடுக்கும் வரை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறாது என்று கூறி பொறுப்பைத் தட்டி கழிக்கும் கையாலாகாத ஓர் அரசாங்கம் என டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களை பழனிசாமி அரசு மீண்டும் ஒருமுறை நம்பவைத்து ஏமாற்றுகிறதோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

ஏற்கனவே நீட் தேர்வு சட்ட மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்ததை  மூடிமறைத்து ஏமாற்றிய இந்த ஆட்சியாளர்கள், ஏழை,எளிய மாணவர்களுக்கு அதே போன்றதொரு துரோகத்தை இப்போதும் செய்வது கண்டிக்கத்தக்கது. 

ஆளுநர் ஒப்புதல் கொடுக்கும் வரை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறாது என்று கூறி பொறுப்பைத் தட்டி கழிக்கும் கையாலாகாத ஓர் அரசாங்கம்  தமிழ்நாட்டில் இருப்பது வேதனை அளிக்கிறது என டிடிவி.வினகரன் கூறியுள்ளார்.