எம்ஜிஆர் கையில் இருந்த சின்னம் பிஎஸ்.வீரப்பா,நம்பியார் கையில் இருப்பது போல் இபிஎஸ் கையில் உள்ளது-சீறும் டிடிவி

எப்போது தேனியில் தேர்தலில் நிற்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என கூறிய டிடிவி தினகரன், அடுத்தவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தவன் நான் பதவிக்காக யார் காலிலும் விழ மாட்டேன் என கூறினார். 

TTV Dhinakaran said that he will not fall at anyone's feet for the post KAK

ஒருவரோடு ஒருவர் அன்பாக இருந்தோம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தேனியில் அமமுக மற்றும் ஓ.பன்னீர் செல்வம் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  1999 தேனி பாராளுமன்ற தேர்தலில் எனக்கு வெற்றிக்காக பாடுபட்டவர் ஓபிஎஸ், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தாலும் ஒருவரோடு ஒருவர் அன்போடு தான் இருந்தோம். அம்மா வழிநடத்திய இந்த இயக்கத்தை கபலிகரம் செய்தவரிடம் மீட்கவே நாங்கள் ஒன்று இணைத்துள்ளோம். அம்மா என்கிற அன்பு சக்தி எங்களை மீண்டு ஒன்று இணைத்து இருக்கிறது. அம்மா வழிநடத்திய இயக்கத்தை நாங்கள் மீட்க்காமல் விடமாட்டோம். 

TTV Dhinakaran said that he will not fall at anyone's feet for the post KAK

யார் காலிலும் விழ மாட்டேன்

தேனியில் இதே பங்களாமேடு பகுதியில் தான் அம்மா என்னை முதன் முதலாக வேட்பாளராக அறிவித்தார். அரசியலில் நான் பிறந்த மண் தேனி தான். அதனால் தான் தேனி என்றாலே தேனீ சாப்பிடுவது போன்று இருக்கும். தேனி சட்டமன்ற தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் என்னை நிற்க வேண்டும் என்று சிலர் என்னிடம் கூறினார்கள். எனக்கு எப்போது தேனி தேர்தலில் நிற்க வேண்டும் என்று எனக்கு தெரியும்.

அடுத்தவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தவன் நான், பதவிக்காக யார் காலிலும் விழ மாட்டேன் என்பது உங்களுக்கு தெரியும். எந்த நேரத்தில் ஸ்டாலின் என்று பெயர் வைதார்களோ என்று தெரியவில்லை சர்வாதிகாரி ஸ்டாலினையை மிஞ்சிவிட்டார். எனவே நாடாளுமன்ற தேர்தலில் தேனியில் திமுக கூட்டணிக்கு மாபெரும் மரண அடி கொடுக்க வேண்டும்.

TTV Dhinakaran said that he will not fall at anyone's feet for the post KAK
எம்ஜிஆர் கையில் இருந்த வெற்றி சின்னம் பிஎஸ்.வீரப்பா, நம்பியார் கையில் இருப்பது போல் எடப்பாடி பழனிச்சாமி கையில் இருந்ததால் தான் அமமுக ஆரம்பித்தோம். பழனிச்சாமியும், ஸ்டாலினும் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளார்கள் என்று மக்கள் பேசி வருகிறார்கள். மங்காத்தா படம் போல் ஸ்டாலினும், பழனிச்சாமியின் உள்ளே வெளியே என்று ஆட்டம் ஆடி கொண்டிருக்கிறார்கள். அதனை நாங்கள் முறியடிக்காமல் விடமாட்டோம் என கூறியவர்,  சட்டசபையில் ஓபிஎஸ் இருக்கையை மாற்றியதற்கு பழனிச்சாமியும் ஸ்டாலினும் கூட்டணி வைத்தது தான் காரணம் என டிடிவி தினகரன் தெரிவித்தார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios