நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதியா.? மண்ணுக்கடியில் வைரமே கிடைப்பதாலும் வேண்டாம்.! விவசாயம்தான் வேண்டும்- டிடிவி

நிலக்கரி சுரங்கம் தொடர்பான மத்திய அரசின் டெண்டர் அறிவிப்பு விவசாயிகளிடம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாகும். மண்ணுக்கடியில் வைரமே கிடைப்பதாக இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம்  விவசாயம்தான் வேண்டும் என்பதே டெல்டா மக்களின் நிலைப்பாடு என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

TTV Dhinakaran has opposed the construction of coal mines in the Cauvery region

காவிரி படுகை- நிலக்கரி சுரங்கம்

காவிரி படுகையில்  5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு விவசாய அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா மாவட்டங்களில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நிலக்கரி சுரங்கத்திட்டங்களுக்கு ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்காக டெண்டர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குறியது.

ஏற்கனவே NLC நிறுவனம் விரிவாக்கம் என்ற பெயரில் காவிரி டெல்டா பகுதிகளில் பல ஏக்கர் விவசாய நிலங்களை கபளிகரம் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக விவசாயிகள் போராட்டங்கள் மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில்,  மத்திய அரசின் இந்த டெண்டர் அறிவிப்பு விவசாயிகளிடம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாகும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அனுமதி? உதயநிதி மறுப்பு

TTV Dhinakaran has opposed the construction of coal mines in the Cauvery region

வைரமே கிடைத்தாலும் வேண்டாம்

‘மண்ணுக்கடியில் வைரமே கிடைப்பதாக இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம்; விவசாயம்தான் வேண்டும்’ என்பதே டெல்டா மக்களின் நிலைப்பாடு. ஆகவே, மாநில அரசு இது வெறும் ஆய்வுப்பணிதான், சுரங்கம் அமைக்கப்படபோவதில்லை என தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளைப் போல மக்களை ஏமாற்றாமல், இந்த ஆய்வுப்பணிக்காக விடப்பட்ட டெண்டரை  மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யவதற்கு உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும்.  தும்பை விட்டு வாலை பிடிப்பதைவிட ஆரம்பத்திலேயே இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தவேண்டும். தவறும்பட்சத்தில், அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மக்கள் போராட்டமாகவே காவிரி டெல்டா பகுதிகளில் முன்னெடுக்கப்படும் என எச்சரிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

புதிய நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதியா.? விவசாயிகள் கவலை அடைய வேண்டாம்.! அனுமதி கொடுக்க மாட்டோம்- தமிழக அரசு
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios