மதுரையில் நூற்றாண்டைக்கடந்த யூனியன் கிளப்பில் பூதம்போல் கிளம்பியிருக்கும் புகார் போலீஸ் கமிசனர் கலெக்டர் வரைக்கும் போயிருப்பதால் ஆடிப்போய் கிடக்கிறது.

மதுரையில் பணக்காரர்கள் பயன்படுத்தும், நூற்றாண்டை கடந்த யூனியன் கிளப் காந்திமியூசியம் அருகில் அமைந்துள்ளது. இந்த கிளப்பானது 1883ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த கிளப்பில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். யூனியன் கிளப் மெம்பர் என்றாலே சமூகத்தில் தனி அந்தஸ்தான். அதற்காகவே இங்கே வந்து பல லட்சங்களை கொட்டி மெம்பராகிறார்கள் வசதிபடைத்தவர்கள். மதுரையில் இருக்கும் முக்கிய தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் இந்த கிளப்பில் மெம்பர். இந்த கிளப்பில் அனைத்து விதமான விளையாட்டுகளுடன் கூடிய பார் வசதி, தங்கும் அறைகளும் உண்டு. பார்க்குள் நுழைந்தாலே அனைத்தும் சொர்க்கம் தான். யூனியன் கிளப்க்கு தேர்தல் என்றாலே அரசியல் கட்சிகள் தோற்றுப்போகும்.அந்த அளவிற்கு தேர்தல் நடக்கும்.

யூனியன் கிளப்பில் நடந்த, நடக்கும் கொடுமைகளை பற்றி புகார் வாசிக்கும் வழக்கறிஞர் வெங்கடேசனிடம் பேசினோம்.
"இந்த கிளப்க்கு கொரோனா வடிவில் ஒரு சோதனை வந்தது. மார்ச் மாதம் கொரோனா தொற்றை காரணம் காட்டி மால்கள் கிளப்கள் பள்ளிக்கூடங்கள் திறக்க அனுமதியில்லை என்று தமிழக அரசு அறிவித்தது.ஆனால் முழுஊரடங்கு  பிறப்பிக்கப்பட்ட ஏப்ரல் மாதம் 22ம் தேதி சங்க நிர்வாகிகள் சிலர் கிளப் பார்க்கு போய்.. பார் ஊழியர் ரவி மற்றும் மேனேஜர் கிருஷ்ணன் ஆகியோரை திறக்கச் சொல்லி சுமார் 5லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் எடுத்துச் சென்றிருக்கிறார்கள்..தனி நபர்கள் யாருக்கும் கிளப் சொந்தம் கிடையாது.அது பொது சொத்து. பாரம்பரியமான கிளப்பில் இப்படி நடக்ககூடாது என்கிற நல்லெண்ணத்தில் தான் போலீஸ் கமிசனர் டேவிட்சன் ஆசிர்வாதம், கலெக்டர் வினய் ஆகியோருக்கு புகார் அனுப்பியிருந்தேன்.


2017-18ம் ஆண்டு வரவு செலவு கணக்கில் ஒரு தேங்காய் விலை ரூ150 என்று கணக்கு எழுதியிருந்தார்கள்.இது சம்மந்தமாக பொதுக்குழுவில் விமர்சனத்துக்குள்ளானது.அடுத்தபடியாக பழமையான தளவாடச்சாமான்கள் எல்லாம் குடோனுக்கு அனுப்பினார்கள் அது எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை.நல்ல நிலையில் இருக்கும் ஆடம்பரமான பொருட்கள் எல்லாம் மிகக்குறைந்த விலையில் ஏலம் என்கிற பெயரில் விற்று விடுகிறார்கள். வருடம் முழுவதும் கிளப்பில் வேலை நடந்து கொண்டே தான் இருக்கிறது. கொரோனா காலத்தில் 4 மாதம் செயல்படாத கிளப்புக்கு இந்த(ஜூன்) மாதம் 1ம் தேதி ரூ5310 ஆண்டு சந்தா கட்டச்சொல்லி கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். இதையெல்லாத்தையும் விட கொடுமையான சம்பவம் நடந்தது. டென்னிஸ் பால் வித்து ஒருத்தர் டிப்பன் சாப்பிடதும், கேரம் போர்ட ஒருத்த எடுத்து காம்பவுண்ட்க்கு வெளிய எறிந்ததை மத்தவுங்க பார்த்து சத்தம் போட்டவுடன் அடுத்த நாள் கொண்டு வந்து அந்த கேரம் போர்ட வச்ச சம்பவமும் நடந்தேறியிருக்கிறது.பாரில் இருந்த மதுபாட்டில்கள் கணக்கு எடுக்கப்பட வேண்டும். அதேவேளையில் சிசிடிவி கேமிரா பதிவுகளை செக் செய்ய வேண்டும். இதற்கான பணத்தை 45 நாட்கள் கையில வைத்திருந்து முன்தேதியிட்டு கணக்கு எழுதி வங்கியில் பணத்தை செலுத்தியிருக்கிறார்கள்.


தேர்தல் நடந்து முடிந்து நிர்வாகிகளாக சுரேஷ், சைபால் சண்முகம், கிருபாகரன், லெட்சுமணன், எம்எஸ் ராஜன் ஆகியோர் இன்னும் பதவி ஏற்கவில்லை. அதற்குள்ளாகவே அவர்கள் இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் போலீஸ் கமிசனர் டேவிட் ஆசிர்வாதம் ஆகியோரிடம் புகார் அளித்திருக்கிறேன் என்றார். 

இந்த புகார்கள் குறித்து யூனியன் கிளப் தரப்பில் விசாரித்தபோது.." தேர்தலில் எங்களுக்கு எதிராக வேலை செய்தவர்கள் தான் போன்ற தவறான தகவல்களையும் அவதூறுகளையும் பரப்பி வருகிறார்கள். அவர் சொல்லக்கூடிய எதுவும் உண்மையில்லை.இந்த கிளப்புக்கு என்று பாரம்பரியம் இருக்கிறது. இதில் இருப்பவர்கள் யாரும் பணத்திற்காக இங்கு வந்து சேரவில்லை. கவுரவத்திற்காக வந்து சேர்ந்திருக்கிறார்கள்.இங்கிருந்து எடுத்துப்போய் சாப்பிடும் அளவிற்கு யாரும் பணத்தில் குறைந்தவர்கள் அல்ல என்கிறார்கள்.

இந்த புகார் அளித்ததற்காக வழக்கறிஞர் வெங்கடேசனை கிளப்பில் இருந்து நீக்குவதற்கான வேலைகளில் ஒரு குரூப் கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறார்களாம். தவறுகள் நடந்தால் அதை சுட்டிக்காட்டுவதும் அதை திருத்திக்கொள்வதும் நல்ல நிர்வாகத்திற்கு அடையாளம்.ஆக பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது எண்ணமாக இருக்கிறது..!!  'முத்தின கத்தரிக்காய் சந்தைக்கு வந்தே தீரும்' என்கிற பழமொழி யாருக்கு பொருந்துதோ இல்லையோ இவர்களுக்கு பொருந்தியிருக்கிறது.

(சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் எழுத்துபூர்வமாக விளக்கமளித்தால் அதையும் வெளியிட தயாராக உள்ளோம்.)