முத்தலாக் மசோதா விவகாரத்தில் அதிமுக ‘யூ டர்ன்’ அடித்தது தவறு என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். 

மக்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்த நிலையில் மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறுகையில், முத்தலாக் மசோதாவிற்கு மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தது தவறு.

 

வேலூர் தேர்தலில் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அதிமுக இந்த முடிவை எடுத்துள்ளது. முத்தலாக்கினால் பெண்கள் உரிமை பாதிக்கப்படுகிறது என்பது தெரிந்தும் எதிர்க்கின்றனர். ஓட்டுக்காக முத்தலாக் மசோதாவுக்கு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. 

திமுகவில் நிலவும் உட்கட்சி பூசலால் கொலைகள் அரங்கேறி கொண்டிருக்கிறது. திமுகவில் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பவர்கள் மன உளைச்சலில் உள்ளனர். வைகோ போன்றவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும். புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துகேட்பு அவகாசம் முடிவதற்குள்ளாகவே அதற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துவது சரியா? என கேள்வி எழுப்பியுள்ளார். முத்தலாக் மசோதா விவகாரத்தில் அதிமுக ‘யூ டர்ன்’ அடித்தது தவறு. முத்தலாக் மசோதாவிற்கு ஆதரவு தர வேண்டும் என தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.