Asianet News TamilAsianet News Tamil

அதிமுக செய்தது வெட்கக்கேடு... கனிமொழி ஆத்திரம்...!

முத்தலாக் தடை மசோதா மீது மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றபோது அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது என கனிமொழி ஆவேசமாக கூறியுள்ளார். 

triple talaq bill...kanimozhi attack speech
Author
Tamil Nadu, First Published Jul 31, 2019, 12:25 PM IST

முத்தலாக் தடை மசோதா மீது மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றபோது அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது என கனிமொழி ஆவேசமாக கூறியுள்ளார். 

நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த முத்தலாக் சட்டம் தடை மசோதா கடந்த 25-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். அந்த மசோதா தொடர்பான விவாதத்தின்போது அதிமுக மாநிலங்களவை குழுத் தலைவரான நவநீதகிருஷ்ணன் இந்த சட்டத்தின் ஒரு சில பிரிவுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்த சட்டமானது ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டதுடன் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. 

triple talaq bill...kanimozhi attack speech

அந்த மசோதா தொடர்பான விவாதத்தின்போது, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவாதத்துக்குப் பிறகு, மாலையில் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு மசோதா குரல் வாக்கெடுப்பு நடத்தினார். மசோதாவுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவாகின. இதனையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேறியது. triple talaq bill...kanimozhi attack speech

இந்த குரல் வாக்கெடுப்பின்போது அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேரும் வெளிநடப்பு செய்தனர். அதேபோல, ஐக்கிய ஜனதா தளம் கட்சி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். மேலும், அ.தி.மு.க மற்றும் ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்திருந்தால் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியிருக்காது. ஆனால், எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், எதிராக வாக்களிக்காமல் புறக்கணித்தது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. 

 

இது தொடர்பாக திமுக எம்.பி.கனிமொழி டுவிட்டரில் கூறுகையில் முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்கு வசதியாக மாநிலங்களவை அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது என்று பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios