Asianet News TamilAsianet News Tamil

2018 ஆம் ஆண்டில் டுவிட்டரில் அதிக வைரலான அரசியல் தலைவர் யார் தெரியுமா ?

 2018-ம் ஆண்டு டிவிட்டரில் அதிக வைரல் ஆன அரசியல் தலைவர், மக்களால் அதிகம் கவனிக்கப்பட்ட நபர் யார், ராகுல் காந்தியா ? அல்லது  மோடியா என்ற விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இவர்கள் கடந்த ஆண்டு  டிவிட்டரில் செயல்பட்ட விதத்தை வைத்தும், மக்கள் அவர்களின் டிவிட்டுகளுக்கு கொடுத்த பதில்களை வைத்தும் இந்த விவரம் வெளியாகி உள்ளது.

 

trending in twitter modi or ragul
Author
Delhi, First Published Dec 20, 2018, 8:44 AM IST

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி என இரண்டு அரசியல் தலைவர்களும் சமூக வலைதளத்தில் சறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள். சமூக வலைதளத்தில் டிவிட்டரில் ராகுல், மோடி இருவரும் அதிக நேரம் செலவழிக்கிறார்கள்.

ஆனால் பிரதமர் மோடிக்குத்தான் அதிக பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். மோடிக்கு 4.47 கோடி  பின்தொடர்பாளர்கள் உள்ளனர். ராகுலுக்கு 80 லட்சம்  பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.

trending in twitter modi or ragul

ஆனால் குறைவான டிவிட் செய்தும், குறைவான பின்தொடர்பாளர்களை கொண்டும் கூட ராகுல் காந்திதான் டிவிட்டரில் வைரலாக இருந்துள்ளார். ராகுல் காந்தியின் டிவிட்டுகள்தான் அதிகமாக ரீ டிவிட் செய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் டிவிட்டுகள் சராசரியாக 8000 தடவை ரீ டிவிட் செய்யப்பட்டுள்ளது. மோடியின் டிவிட்டுகள் சராசரியாக 3000 தடவை மட்டுமே ரீ டிவிட் செய்யப்பட்டுள்ளது.

trending in twitter modi or ragul

அதேபோல் ராகுலின் டிவிட்டிற்கு சராசரியாக 3000 பதில்கள் வருகிறது. மோடியின் டிவிட்டுகளுக்கு சராசரியாக 600 பதில்களே வருகிறது.

அதேபோல் ராகுலின் டிவிட்டிற்கு சராசரியாக 25000 பேர் விருப்பம் தெரிவிக்கிறார்கள். மோடியின் டிவிட்டுகளுக்கு சராசரியாக 15000 பேர் விருப்பம் தெரிவிக்கிறார்கள். இந்த மூன்றிலும் ராகுல்தான் முன்னிலை வகிக்கிறார்.

trending in twitter modi or ragul

ஆனால் 2017 வருடத்தில் மோடி அனைத்திலும் ராகுலை விட முன்னிலையில் இருந்தார். ஒரே வருடத்தில் ராகுல் அவரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து இருக்கிறார். முக்கியமாக காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்ற ஒரே வருடத்தில் இவ்வளவு பெரிய மாற்றமும் நிகழ்ந்து உள்ளது.

ராகுல் காந்தி அதிகமாக விவசாயம், வேலை வாய்ப்பு, மோடி குறித்து பேசியுள்ளார். ராகுல் காந்தி 46 டிவிட்டில் 1 டிவிட் வேலைவாய்ப்பு குறித்தும், 17 டிவிட்டில் 1 டிவிட் விவசாயம் குறித்தும், 13 டிவிட்டில் 1 டிவிட் மோடி குறித்தும் பேசியுள்ளார்.

trending in twitter modi or ragul

மாறாக மோடி 462 டிவிட்டில் 1 டிவிட் மட்டுமே வேலைவாய்ப்பு குறித்து எழுதுகிறார். 33 டிவிட்டில் 1 டிவிட் மட்டுமே விவசாயம் குறித்து எழுதுகிறார். ஆனால் 33 டிவிட்டில் 1 டிவிட்டில் தன்னை பற்றி எழுதுகிறார்.

இந்த ஆண்மு முழுக்க ராகுல் காந்திதான் டிவிட்டரில் வைரலாக இருந்துள்ளார். அதேபோல் மோடிக்கு எதிராக உருவாக்கப்பட்ட கோ பேக் மோடி போன்ற ஹேஷ்டேக்குகள் அவருக்கு எதிராக பெரிய வைரலாகி உள்ளது. 2017 மோடி வகித்த இடத்தை 2018-ல் ராகுல் பிடித்து இருக்கிறார்.

அதேபோல் 2017-ஐ வைத்து பார்க்கும் போது 2018-ல் தான் மோடி அதிகமாக டிவிட் செய்துள்ளார். 2018-ல் மோடி,  மாதம் 300-400 டிவிட்டுகள் செய்துள்ளார். ஆனால் ராகுல்,  மாதம் 60-100 டிவிட்டுகள் வரை மட்டுமே செய்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios