Asianet News TamilAsianet News Tamil

ரயில் பயணிகளுக்கான இலவச இன்சூரன்ஸ் ரத்து… ஐ.ஆர்.சி.டி.சி அதிரடி !!

ரயில் பயணிகளுக்கான இலவச இன்சூரன்ஸ் ரத்து… ஐ.ஆர்.சி.டி.சி அதிரடி !!

Train Insurence plan cancel from sep 1
Author
Chennai, First Published Aug 12, 2018, 8:42 AM IST

பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத்  தொடர்ந்து டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் வகையில்  ரயில் பயணிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்  செயல்படுத்தி வந்தது. இந்த திட்டத்தின் கீழ், ரெயில் விபத்தில் உயிரிழக்கும் பயணிகளின் குடும்பத்துக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை இழப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது.

Train Insurence plan cancel from sep 1

இதைப்போல விபத்தில் ஊனமடையும் பயணிகளுக்கு ரூ.7½ லட்சமும், காயமடைந்தால் ரூ.2 லட்சமும் இழப்பீடு வழங்கப்படுகிறது. மேலும் உடலை எடுத்துச்செல்ல ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை கைவிட ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு செய்துள்ளது. அதன்படி வரும்  1-ந் தேதி முதல் ரெயில் பயணிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் கிடையாது என ரெயில்வேத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Train Insurence plan cancel from sep 1

அதற்கு பதிலாக இன்சூரன்ஸ் திட்டம் இனிமேல் விருப்ப தேர்வாக அமைகிறது. அதாவது இன்சூரன்ஸ் தேவை என்றால் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே அதை தேர்வு செய்ய வேண்டும்.

இதற்காக தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டண விவரம் குறித்து இன்னும் சில நாட்களில் ரெயில்வேத்துறை அறிவிப்பு வெளியிடும் எனவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில நாட்களுக்கு முன்பு டெபிட் கார்டு மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, பதிவு கட்டணத்தை ரெயில்வே ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios