Asianet News TamilAsianet News Tamil

பாவம்.. கேப்டனுக்கா இந்த கதி. குமுறும் தொண்டர்கள்.. வாக்கு அரசியல் படுத்தும் பாடு.

உடல் நிலை சரியில்லாதவரை இந்த கொரோனா நேரத்தில் வெறும் வாக்குக்காக வாகனத்தில் சுற்றவைப்பது சரியில்லை என சொந்த கட்சி தொண்டர்களே கடிந்து பிரேமலதா விஜயகாந்தை கடிந்து கொண்டது குறிப்பிடதக்கது. 

Tragedy .. Is this the situation for the captain. Cadres Feeling too .. dmdk vote politics.
Author
Chennai, First Published Mar 26, 2021, 10:41 AM IST

நேற்று தனது 2 வது நாள் தேர்தல் பரப்புரையை சென்னை எழும்பூர் பகுதியில் தொடங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் வந்து கையசைத்து விட்டு எதுவும் பேசாமல் புறப்பட்டதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உடல்நலக் குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில்,  கடந்த 24 ம் தேதி தனது தேர்தல் பரப்புரையை  கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் தொடங்கினார். அப்போது, கும்மிடிப்பூண்டி தொகுதி தேமுதிக வேட்பாளர் கே.எம்.டில்லி, பொன்னேரி சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் பொன்.ராஜா ஆகிய இருவரை ஆதரித்து கும்மிடிப்பூண்டி பஜாரில் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

Tragedy .. Is this the situation for the captain. Cadres Feeling too .. dmdk vote politics.

திறந்த வெளி  வாகனத்தில், தொண்டர்களை பார்த்து கையசைத்தபடியே விஜயகாந்த் வந்தார். சிறிது நேரத்தில் விஜயகாந்த் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தொண்டர்கள் அவரசு பேச்சை கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், வாகனத்தில் உள்ளே சென்று விஜயகாந்த் அமர்ந்து கொண்டார். உடல்நலக் குறைவால் வாகனத்தில் அமர்ந்தபடியே விஜயகாந்த் பேசுவார் என பின்னர் கூறப்பட்டது, தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில்,  விஜயகாந்த் எதுவும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார்.சென்னை எழும்பூர் தொகுதியில் 2வது நாள் தேர்தல் பரப்புரையை  விஜயகாந்த் சேத்துப்பட்டு பகுதியில் நேற்று தொடங்கினார்.பின்னர், ஊர்வலமாக புளியந்தோப்பு பகுதிக்கு வந்தார். புளியந்தோப்பு, ஒரு பகுதி எழும்பூர் தொகுதியிலும், மற்றொரு பகுதி  திரு.வி.க.நகர் தொகுதியிலும் வருவதால்  2 தொகுதி வேட்பாளரும் ஒரே இடத்திற்கு வந்திருந்தனர். 

Tragedy .. Is this the situation for the captain. Cadres Feeling too .. dmdk vote politics.

அப்போது, திறந்த வெளி வேனில் மக்கள் மத்தியில் தோன்றிய விஜயகாந்த். கட்சித் தொண்டர்களையும், மக்களையும் பார்த்து கையசைத்தார். கைகூப்பி வணங்கினார். முதல் நாள் பிரச்சாரத்தில் தான் விஜயகாந்த் பேசவில்லை, எனவே, சென்னை பரப்புரையில் பேசுவார் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இங்கேயும் சைகை மூலம் மட்டுமே வாக்கு சேகரித்துவிட்டு விஜயகாந்த் புறப்பட்டு சென்றர். நீண்ட நாட்களுக்கு பிறகு  விஜயகாந்த் பேச்சை கேட்பதற்காக ஆவலுடன் வந்திருந்த அக்கட்சி தொண்டகள் மட்டுமின்றி கூட்டணி கட்சியினரும் இதனால் ஏமாற்றம் அடைந்தனர். உடல் நிலை சரியில்லாதவரை இந்த கொரோனா நேரத்தில் வெறும் வாக்குக்காக வாகனத்தில் சுற்றவைப்பது சரியில்லை என சொந்த கட்சி தொண்டர்களே கடிந்து பிரேமலதா விஜயகாந்தை கடிந்து கொண்டது குறிப்பிடதக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios