வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று இன்னும் பதவியே ஏற்காத கதி ஆனந்துக்கு ரயில்வேயில் பதவி வாங்கிக்கொடுத்து அசத்திவிட்டார் திமுக பொருளாளர் துரைமுருகன்.
 
கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்து முடிந்த வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட  துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் பலத்த இழுபறிக்கிடையே வெற்றியும் பெற்றார்.  இன்னும் நாடாளுமன்றத்திற்குச் செல்லவில்லை. நாடாளுமன்றத்தில் இன்னும் பதவியேற்பும் செய்து கொள்ளவில்லை. ஆனால், அதற்குள் கதிர் ஆனந்த் தென்னக ரயில்வேயின் சென்னைக் கோட்டத்துக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவர் என்கிற பதவியை வாங்கி கொடுத்துள்ளார்  அவரது அப்பா துரைமுருகன்.

தென்னக ரயில்வேயில் மேற்கொள்ளப்படும் புதிய ரயில் திட்டங்களில் இவர்களது தலையீடும் இருக்கும். இப்படி ஒரு பதவி இருப்பதே தி.மு.க எம்.பி-க்கள். என்ன? அதிமுகவினருக்கே கூட தெரியாத நிலையில், துரைமுருகன் தன் மகனுக்காக களத்தில் இறங்கி காரித்தை கட்சிதமாக முடித்துவிட்டார் என்று உள்ளுக்குள் புலம்பிவருகிறார்கள் தி.மு.க-வினர். அட அது ஏன்? அதிமுகவின் ஒரே ஒரு எம்பியான ரவீந்திரநாத் குமார் கூட இந்த மேட்டர் தெரிந்ததும்,ஐய்யோ போச்சே... போச்சே... தெரிஞ்சிருந்தா, இப்போதைக்கு இதை கைப்பற்றியிருக்கலாமே என புலம்பினாராம்.

அதுவும், சென்னைக் கோட்டத்தில் டி.ஆர்.பாலுவின் ஸ்ரீபெரும்புதூர், மத்திய சென்னை, அரக்கோணம் உள்ளிட்ட தொகுதிகள் வருகின்றன. ஆனாலு, இந்தத் தொகுதியில் மூத்த தி.மு.க உறுப்பினர்கள் எம்பியாக ஜெயித்துள்ள நிலையில். அவர்களை முந்திச்சென்று பதவியை கதிர் ஆனந்த் பெற்றுள்ளார். டிஆர் பாலு, ஜகத்ரட்சகன் உள்ளிட்டோர் பயங்கர காண்டில் இருக்கிறார்களாம்.


 
அப்பா பொருளாளர். மகனும்  முதல்முறையாக தேர்தலில் நின்று ஜெயித்ததும் பதவி? என்ன இது கொடுமை என்று சிலர் காதுப்படவே முணுமுணுக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக டி.ஆர்.பாலு, இப்படி ஒரு வாய்ப்பை, தாம் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போய்விட்டதே என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். ஒருவழியாக, நேற்று முன்தினம் தென்னக ரயில்வே அலுவலகத்தில் நடந்த நாடாளுமன்றக் குழுத் தலைவர் தேர்வில் வெற்றியும் பெற்றுள்ளார் கதிர் ஆனந்த். இந்தப் புகைச்சல் இன்னும் ஒரு சில நாள்களில் தி.மு.க-வுக்குள் எரிமலையாய் வெடிக்கப்போகிறது என்று புலம்புகிறார்கள், மூத்த நிர்வாகிகள்.