நாடோடிகள் ஸ்டைலில் கமல்ஹாசன் அலப்பறை...! சின்னம் கிடைத்த அடுத்த நிமிடமே போட்டோ ஷூட்... தேர்தல் கமிஷனை தெறிக்கவிட்ட நம்மவர்..!

அடிச்சு தூள் கிளப்பும் வெயிலில் ஆறுதலாக ஜிகர்தண்டா போல், பெரிய கட்சிகளின் பேய்த்தனமான அரசியல் அக்கப்போர்களுக்கு நடுவில் இந்த புது அரசியல்வாதி கமல்ஹாசன் செய்யும் அக்குறும்புகள் கலகலப்பாகத்தான் இருக்கின்றன.

torch light symbol

அடிச்சு தூள் கிளப்பும் வெயிலில் ஆறுதலாக ஜிகர்தண்டா போல், பெரிய கட்சிகளின் பேய்த்தனமான அரசியல் அக்கப்போர்களுக்கு நடுவில் இந்த புது அரசியல்வாதி கமல்ஹாசன் செய்யும் அக்குறும்புகள் கலகலப்பாகத்தான் இருக்கின்றன. 

கமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சிக்கு தேர்தல் கமிஷன் ‘டார்ச் லைட்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்த தகவலை இன்று காலை 9:46 மணிக்கு தனது ஐபோனிலிருந்து ஆங்கிலத்தில் ட்விட் செய்திருந்தார் கமல்ஹாசன். அதன் மொழிபெயர்ப்பு... “எதிர்வரும் தேர்தல்களில் எங்களுக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தை வழங்கியதற்காக தேர்தல் கமிஷனுக்கு ம.நீ.ம. நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. மிக பொருத்தமான சின்னம் இது. மக்கள்நீதி மய்யம் தமிழக மற்றும் இந்திய அரசியலில் புதிய காலம் துவங்குவதற்கான ஒளி கொடுப்பவனாக இருக்க முயற்சிக்கும்.” என்று சொல்லியிருந்தார். torch light symbol

ம.நீ.ம.வுக்கு வழங்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தைப் பற்றி அக்கட்சியின் நிர்வாகிகள் சந்தோஷமாகவும், பிற கட்சியினர் கலாய்ப்பாகவும் கருத்துக்கள் தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில்... சற்று நேரத்துக்கு முன் தனது கட்சியின் சின்னத்தை ஏந்தியவாறு செம்ம போட்டோ ஷூட் ஒன்றையே நடத்தி வெளியிட்டிருக்கிறார் கமல். கமலுக்கு பிடித்தமான கறுப்பு நிற உடையில் கையில் பழைய ஸ்டைல் சில்வர் நிறத்து, சில்வர் மெட்டல் டார்ச்சை இருளில் நின்றபடி ஒளிரவைத்து பிடித்தவாறு போஸ்களை தெறிக்க விட்டிருக்கிறார். அந்தப் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. torch light symbol

’அடப்பாவீங்களா இப்பதானே சின்னமே ஒதுக்குனோம்! அதுக்குள்ளே போட்டோஷூட்டே நடத்தி ரிலீஸ் பண்ணிட்டீங்களா?’ என்று தேர்தல் கமிஷனே தெறித்துக்கிடக்கிறது நம்மவரின் அதிரடி ஆக்‌ஷனால்! தொழில்நுட்ப வளர்ச்சியை முழுமையாய் பயன்படுத்தும் ஒரே அரசியல்வாதி இவர்தான். நிச்சயம் இளைஞர் பட்டாளத்தின் வாக்குகள் எங்களுக்குதான்! என்று ம.நீ.ம. பாய்ஸ் குதூகலிக்கிறார்கள். torch light symbol

அதேவேளையில் பிற கட்சியினரோ ‘நாடோடிகள் படத்துல எடுபிடிகளை வெச்சுக்கிட்டு அலையுற அலப்பறை அரசியல்வாதி மாதிரி ஆயிடுச்சு கமல் கதையும். எதுக்கெடுத்தாலும் போட்டோ ஷூட், ட்விட்டர் கூத்துன்னு பண்ணிட்டு இருக்கிறார். காமெடிதான்யா இந்த மனுஷனோட என்கிறார்கள். எப்படி இருந்தா என்ன? பாலிடிக்ஸால டைம் பாஸானா சரி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios