பிகில் படத்தில் நடிகர் விஜய் கத்தியுடன் வரும் காட்சிகளை பார்க்கும்போது ரசிகர்களும் வன்முறையை முன்னெடுக்கும் சூழல் உள்ளது. எம்.ஜி.ஆர். பாணியில் நடிகர்கள் நடிக்க வேண்டும், மாறாக நடிகர்களின் திரைப்படங்களால் வன்முறை ஏற்பட கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார். 

இதற்கு எதிராக ரசிகர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்த தனியார் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு விடை அளித்த அமைச்சர் ஜெயக்குமார் அது சட்டப்படி எடுக்கும் நடவடிக்கை. அதில் அரசியல் இல்லை என்று கூறினார்.

 

எம்.ஜி.ஆர். பாணியில் நடிகர்கள் நடிக்க வேண்டும், மாறாக நடிகர்களின் திரைப்படங்களால் வன்முறை ஏற்பட கூடாது. நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும்  என அறிவுரை கூறினார். இதனால் விஜய் ரசிகர்கள் கொதிப்படைந்து, ‘’எம்.ஜி.ஆர் பல படங்களில் கத்தி சண்டையை எதை வைத்து போட்டார் என சமூக வலைதளங்களில் குமுறி வருகின்றனர். 

ஆக்‌ஷன் ஹீரோக்கள் கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்து நடிப்பது காலம் காலமாக இருந்து வரும் சூழலில் அமைச்சர் ஜெயக்குமாரில் இந்தக் கருத்து நடிகர் விஜய்யை நேரடியாக சீண்டும் விதமாக உள்ளது என விஜய் ரசிகர்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.