நாளை காலை 10.30 மணிக்கு குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்யா நாயுடுவை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் முத்துக்கருப்பன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகின்றன. இவரது பதவிக்காலம் இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது. இந்த நிலையில் முத்துக்கருப்பன், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக  நேற்று முன்தினம் அறிவித்தார்.

ஆனால் அன்று மாலையே இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம் சொன்னால் மட்டுமே ராஜினாமா செய்வேன் என்று திடீர் பல்டி அடித்தார்

இந்த நிலையில்,  மத்திய அரசு காவிரி வாரியம் அமைக்காததை கண்டித்து  நாளை காலை 10.30 மணிக்கு வெங்கையா நாயுடுசை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கப் போவதாக முததுக் கருப்பன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள ராஜிநாமா கடிதத்தை செய்தியாள்களிடம் வாசித்துக் காண்பித்தார்.  நாளை அவர் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை  உண்மையிலேயே ராஜினாமா செய்தால் காவிரிக்காக ராஜினாமா செய்யும்  முதல் அரசியல்வாதி என்ற பெருமையை அதிமுக எம்.பி. முத்து கருப்பன்  பெறுகிறார்.