திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக முதலமைச்சர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அரசு பொதுத்துறை மற்றும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கும் 
விடுமுறை அறிவித்துள்ளனர். 

இந்தியாவின் முதுப்பேரும் அரசியல் தலைவரும், தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என அரசு தரப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். இதன் அடிப்படையில் விடுமுறை மற்றும் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் ஒரு நாள் விடுமுறை மற்றும் 3 நாட்களுக்கு அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஏழை, எளிய மக்களுக்கான பாடுப்பட்டவர் கலைஞர் என்றும் இரங்கலில் கூறியுள்ளார். இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.