திமுக தலைவர் கலைஞரின் மறைவால் தமிழக மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் தற்போது மெரீனா அண்ணா சதுக்கத்தை அடைந்த கலைஞரின் உடல் அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதுவரை இல்லாத அளவிற்கு திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி பயணத்தில் பல லட்ச கணக்கான  மக்கள் வந்து குவிந்து உள்ளனர் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை இடைவெளி இல்லாமல் மக்கள் கூட்டம் அலை மோதிகிறது. கலைஞரின்  இறப்பு செய்தியை கேட்டு மனமுடைந்த தீவிர தொண்டர்கள் அவர்கள் ஊரிலிருந்து சென்னையை நோக்கி நேற்று மாலை முதலே படை எடுக்க ஆரம்பித்தனர். அதில் குறிப்பாக, இன்று காலை முதல் தமிழகம்   உள்ள அனைத்து மாவட்டத்தில் இருந்தும் குவியல் குவியலாக தொண்டர்கள் சென்னை வந்தடைந்தனர். 

இதில் என்ன ஒரு முக்கியமான விஷயம் என்றால், இன்று தமிழகம் முழுவதும் எந்த ஒரு சுங்க சாவடியிலும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பது தான் ஐலைட்.எந்த ஒரு சுங்க சாவடியிலும், கட்டணம் கேட்க வில்லை. அப்படி கேட்டாலும் எதாவது பிரச்சனை வந்துவிடும் என புரிந்துக்கொண்ட சுங்கசாவடி நிர்வாகம் ஒரு இடத்தில் கூட கட்டணம் வசூலிக்க படவில்லை 

இதற்கு முன்னதாக ஜெயலலிதா இறந்த போதும், அறிவியல் மேதை அப்துல் கலாம் இறந்த போதும் கூட  இது போன்று கட்டணம் வசூலிக்காமல் இல்லை.மேலும், இந்த நிமிடம் வரை, ஒரு லாரி ஓட வில்லை...ஒரு கடை திறக்கப்பட வில்லை....சொந்த ஊரில் இருப்பவர்கள் மட்டுமே இருசக்கர வாகனம் மற்றும் காரில் பயணம் செய்கின்றனர். 

இவை எல்லாம் வைத்து பார்க்கும் போது முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தொண்டர்கள் திமுக  தலைவருக்காக கூடி உள்ளனர். மேலும் கலைஞர் மீது மக்கள் வைத்திருக்கும் மரியாதையையும், அன்பையும் பாசத்தையும் அனைவராலும் உணர்ந்துக்கொள்ள முடிகிறது.