toll fees will collect on national highways said nitin gadkari

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை கைவிடுவதற்கான வாய்ப்பே இல்லை என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் நீண்ட காலத்திற்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சாலைகளை சரியான முறையில் பராமரிக்கவும், வாகன ஓட்டிகள் தரமான சாலைகளை பயன்படுத்தவும், சுங்கக்கட்டணம் வசூலிப்பது அவசியமாகும். 

தரமான சாலைகள், விரைவான பயணம், எரிபொருள் சேமிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு உலகம் முழுதும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நல்ல சேவை வேண்டுமென்றால், அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். ஒரு காலத்தில் மும்பையில் இருந்து புனே செல்வதற்கு 9 மணி நேரம் வரை ஆனது. ஆனால், இப்போது தடையின்றி 2 மணி நேரத்தில் பயணம் செய்யும் சூழல் உள்ளது. எனவே சுங்கக் கட்டணத்தை கைவிடுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை . அடுத்த 5 ஆண்டுகளில் 83,677 கிலோ மீட்டர் சாலை அமைக்கும் திட்டம், 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.