Today the AIADMK MLAs meeting EPS-OPS group fear about Sleeper Cell People
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் கலந்துகொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளதால் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் பயந்துபோய் உள்ளனர்.
தமிழக சட்டசபை கூட்டம், வரும், 8 ஆம் தேதி தொடங்குகிறது. அன்று, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், சட்டசபையில் உரையாற்றுகிறார். கூட்டத்தில்,சுயேச்சையாக வெற்றி பெற்ற தினகரனும்,பங்கேற்க உள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 'டிபாசிட்'டை பறிகொடுத்த தி.மு.க.,வினர், சட்டசபையில், பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். மேலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களை தங்கள் வசம் இழுத்து, ஆட்சியை கவிழ்க்க, தினகரனும் முயற்சித்து வருகிறார்.
இவற்றை முறியடிக்கவும், சட்டசபை கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை தீர்மானிக்கவும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதில், அ.தி.மு.க.,வின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்பார்களா… அல்லது டி.டி.வி.தினகரன் கூறும் ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் கூட்டத்தைப் புறக்கணிப்பார்களா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே நேற்று இபிஎஸ் அணியைச் சேர்ந்த கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்எல்ஏ தினகரனை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்திருந்த நிலையில்இன்று எத்தனை பேர் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்ற சஸ்பென்ஸ் நிலவுகிறது.
