இந்தாண்டு குடியரசு தின விழாவில் கோட்டை அமீர் பதக்கத்தை அரசு வழங்காதது வேதனை அளிக்கியது என்று துரைமுருகன் கூறியுள்ளார். கருணாநிதி அறிவித்த கோட்டை அமீர் பதக்கத்தை அரசு வழங்காததற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக- அதிமுக கூட்டணிக்கு அச்சாரமாக, மிரட்டலுக்கு பயந்து கோட்டை அமீர் பதக்கம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

குடியரசு தினத்தை விடுமுறை தினமாக பார்க்காமல் நாட்டின் உரிமை, வலிமையை பார்க்க வேண்டும் என்று கிண்டி ராஜ்பவனில் தேநீர் விருந்தில் ஆளுநர் பன்வாரிலால் கூறியுள்ளார். பல்வேறு போராட்டங்கள் நடந்த பிறகுதான் சுதந்திரம் கிடைத்தது என அவர் தெரிவித்துள்ளார். 

தேர்தலில் நோட்டாவிற்கு வாக்களிக்காதீர்கள், அது உங்கள் வெறுப்பைத்தான் காண்பிக்கிறது என கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தில் நடத்த மக்கள் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். ஓட்டுக்கு ரூ.5,000, ரூ.10,000 கொடுக்கும் மகாபிரபுக்கள் உங்கள் பணத்தைத்தான் திருப்பி தருகிறார்கள் என சேனாதிபதி இந்தியன் தாத்தா ஸ்டைலில் கமல் பேசியுள்ளார்.