*    எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தமிழகத்தில் பி.ஜே.பி.க்கு போட்டியாக வேறெந்த கட்சிகளும் நிற்க முடியாது. நோட்டா மட்டுமே போட்டி! என இணையதளங்களில் விமர்சனங்கள்  வெடிக்கின்றன. 
(இது மட்டும் அந்த நோட்டாவை கண்டுபிடிச்சவனுக்கு தெரிஞ்சா, எம்பூட்டு வருத்தப்படுவான். தனக்கு இத விட பெரிய அவமானமில்லைன்னு அழுதுடுவானே?)

*    தகவல் அறியும் உரிமை சட்ட பிரிவின் மூலம் தேர்தல் ஆணையத்தில் சில தகவல்கள் கேட்டோம். ஆனா பதில் வரலை. அதனால் அத்துறையின் மேல்முறையீட்டு அலுவலரை அணுகபோறோம். அவரும் பதில் சொல்லலேன்னா நீதிமன்றத்தை நாடுவோம்! என கூறியுள்ளார் தங்கதமிழ்செல்வன். 


(தல இப்படி அவரு இல்லேன்னா இவரு, இவரும் இல்லேன்னா எவரோன்னு நீங்க அலைஞ்சுகிட்டே இருங்க. அதுக்குள்ளே என்னென்ன பண்ணணுமோ அத்தனையையும் அம்சமா பண்ணி முடிச்சுக்குவாங்க அவிய்ங்க.)

*    போட்டோவுக்கு அமைச்சர்களுடன் நிற்கவிடாமல் பெண் எம்.எல்.ஏ. பரமேஸ்வரியை, சக கட்சியினரே தடுத்ததால் அவர் கோபப்பட்டு வயலில் இறங்கி ஓடினார்!: செய்தி 
(இதுக்கெல்லாம் கோவப்பட்டு வயல்ல இறங்குனா எப்படி? எம்பூட்டு அடிச்சாலும் கண்ணுல வேர்வை காட்டாம இருந்தாதானே அமைச்சராக முடியும் மேடம்?)

*    போன வருஷம்தான் ’தி.மு.க.வை அழிப்பதுதான் நமது முதல் வேலை!’ன்னு சொன்னார் வைகோ. ஆனா ஒரு வருஷத்துக்குள்ளே இப்போ ‘ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓயமாட்டேன்!’ன்னு சொல்றார். இவரும் அசிங்கப்பட்டு, கட்சியையும் அசிங்கப்படுத்துறார்:  கட்சியை விட்டு விலகிய ம.தி.மு.க.வினர் இப்படி கொதிப்பு. 


( அவரு கேரக்டரையே புரிஞ்சுக்காதாது உங்க தப்பு பாஸ். தி.மு.க.வை அழிப்போமுன்னு சொன்னாரே அழிச்சாரா? அதேமாதிரிதான் ஸ்டாலின் முதல்வராகுறதும். டீட்டெயிலு புரியாம டெரர் ஆகாதீக பாஸு)

*     காடுவெட்டி குருவுக்கு மகாபாரதத்தில் கர்ணன் கதாபாத்திரம் ரொம்ப பிடிக்கும். தானும் அதை போல அரசியலில் வீழ்த்தப்பட்டதாக கடைசி நேரத்தில் சொல்லி அழுதார்:! குருவின் உறவினர்கள் இப்படி புலம்பல். 


(பார்த்து சூதானமா பேசுங்க பாஸ், மகாபாரதம்னா திருவள்ளுவர் எழுதுனதா இல்லே டாம்க்ரூஸ் எழுதுனதான்னு  சிலருக்கு டவுட்டு வந்துடும்.)