சசிகலாவும் ஸ்டாலினும் கை கோர்த்துட்டாங்க.. அதிமுகவை வச்சு செய்ய முடிவு பண்ணிட்டாங்க.. கதறிய ஜெயக்குமார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அதிமுக என்ற கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் வழிகாட்டுதலின் பெயரில் நடைபெற்று வருகிறது. ஆனால் தொண்டர்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் சசிகலா தவறான எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார்.
சசிகலாவும், திமுகவும் கைகோர்த்துக் கொண்டு அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், ஆதிமுக கொடியையும் பொதுச் செயலாளர் என்ற பெயரையும் பயன்படுத்தி அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்த சசிகலா முயற்சிப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக பொன்விழா தினத்தன்று தனது காரில் அதிமுக கொடியை கட்டி வந்ததுடன், எம்ஜிஆர் நினைவில்லத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்ததோடு மட்டுமல்லாமல் பொதுச் செயலாளர் என பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் திறந்து வைத்த சசிகலா மீது மாம்பலம் காவல் நிலையத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் புகார் மனுவை அளித்தனர்.
இதையும் படியுங்கள்:நான் பணக்கார வீட்டு பையன்தான் ஆனால் கல்விக்கடனில்தான் படித்தேன்.. மனம் திறந்த பிடிஆர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அதிமுக என்ற கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் வழிகாட்டுதலின் பெயரில் நடைபெற்று வருகிறது. ஆனால் தொண்டர்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் சசிகலா தவறான எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். ஓபிஎஸ் இபிஎஸ் மற்றும் மதுசூதனன் அவர்களிடம்தான் கட்சியின் உரிமை உள்ளது. இன்று டெல்லி உயர் நீதிமன்றமும், இந்திய தேர்தல் ஆணையமும் இதை தெரிவித்துள்ள நிலையில் கட்சியில் வீணாக குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா முயன்று வருகிறார். சசிகலா மீது புகார் அளிக்க வந்தபோது மாம்பலம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் இல்லாதத நிலையை பார்க்க முடிந்தது. புகார் கொடுத்த பின்னரும் சிஎஸ்ஆர் எனப்படும் ஒப்புகைச்சீட்டு கூட தராமல் போலீசார் இழுத்தடிப்பு செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படியுங்கள்: அதிமுக தொண்டர்களுக்கு பயங்கர அதிர்ச்சி.. எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி. காலையிலேயே பரபரப்பு.!!
ஒரு முன்னாள் அமைச்சரான எனக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களுக்கு என்ன நிலை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். திமுகவும்- சசிகலாவும் கைகோர்த்து அதிமுகவில் பிரச்சனையை ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். அதேபோல அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் பணியாற்றிய ஊழியர்களை பணி நீக்கம் செய்து விட்டு திமுகவினரை பணியில் அமர்த்த திமுக அரசு ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டினார். அதே நேரத்தில் அம்மா உணவகத்தை மூடலாம் என அதிமுக அரசு முடிவு செய்தால், அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என அவர் எச்சரித்தார்.