நான் பணக்கார வீட்டு பையன்தான் ஆனால் கல்விக்கடனில்தான் படித்தேன்.. மனம் திறந்த பிடிஆர்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோவில் வளாகத்திற்குள் புகைப்படக்கருவிகள் பயன்படுத்துவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அனுமதி பெறப்படும் என்றும் அவர் கூறினார்.
கல்விக்கடன் பெற்று உயர்கல்வி பயின்றதாகவும், கல்விக்கடனால் பயன் அடைந்தவன் தன் என்றும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மதுரையில் நடைபெற்ற கல்விக்கடன் முனைப்பு திட்ட தொடக்க விழாவில் தமது கல்விக்காலங்களை நினைவு கூர்ந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மிகப்பெரிய பொருளாதார பின்னணி கொண்ட குடும்பத்தை சார்ந்தவன் என்ற போதிலும் 1987 ல் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக 1 லட்சம் கல்விக்கடன் பெற்று முதுகலை பட்டப்படிப்பு பயின்றேன் என்றார். இன்றைக்கு எனது புதல்வர்களிடம் எந்த பல்கலைக்கழகத்தில் வேண்டுமானாலும் தேர்வு செய்து படியுங்கள் அதற்கான பொருட் செலவை நான் செய்ய தயாராக இருக்கிறேன் என கூறினாலும் கூட வேலைவாய்ப்பிற்கு ஏற்ப பயில வேண்டும் என அவர்கள் தெளிவு பெற்றுள்ளது மகிழ்வு அளிக்கிறது என்றார்.
இதையும் படியுங்கள்: ராஜபக்சே மகனுக்கு உ.பியில் விருந்து.. இது பாஜகவின் ஈனத்தனமான செயல்.. டார் டாராக கிழித்த சீமான்.
எனது தந்தையார் ஒரு ஐந்து ஆண்டுகளில் மதுரைக்காக நிறைவேற்றி தந்த திட்டங்களை வைத்தே முதல் தேர்தலில் நான் வென்று விட்டேன் என்ற அவர், அதே போல் இந்த 5 ஆண்டுகளும் திட்டங்களை செயல்படுத்துவோம் என்றார். பின்னர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மதுரை முழுமைத்திட்டம் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டார், அதில் பேசிய அவர்,
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோவில் வளாகத்திற்குள் புகைப்படக்கருவிகள் பயன்படுத்துவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அனுமதி பெறப்படும் என்றும் அவர் கூறினார். கோயிலை சுற்றி வாகனங்கள் நிறுத்துவதற்கு மாற்று வழி ஏற்படுத்த வேண்டும். பொது நன்மைக்காக மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். நகரின் ஒருசில இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அனுமதிக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றுத் திட்டங்களை செயல்படுத்தி போக்குவரத்து நெரிசலையும், சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: அதிமுக தொண்டர்களுக்கு பயங்கர அதிர்ச்சி.. எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி. காலையிலேயே பரபரப்பு.!!
வெளிநாடுகளில் முழுமைத்திட்டம் 50 ஆண்டுகளுக்காக வரையறுக்கப்பட்டு ஒவ்வொரு 5 ஆண்டுகளிலும் புதுப்பிக்கப்படும். மதுரை மாவட்டத்தில் 1996 முதல் 2001 வரை பல்வேறு திட்டங்களும் தொலைநோக்கு பார்வையுடன் மாட்டுத்தாவனி மற்றும் சுற்றுச்சாலை அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதுபோன்ற தொலைநோக்கு திட்டங்கள் கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் மதுரை மாவட்டத்தில் கொண்டுவருவதே என்னுடைய முக்கிய நோக்கமாக உள்ளது என்றார்.