அதிமுக தொண்டர்களுக்கு பயங்கர அதிர்ச்சி.. எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி. காலையிலேயே பரபரப்பு.!!
இந்நிலையில் அது தொடர்பாக இன்று காலை 6:30 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம்ஜிஎம் மருத்துவமனையில் ரூம் நம்பர் 11 ஆம் அறையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில்,
தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் குடலிறக்க பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அதற்கான பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்: காதலுக்கு மட்டுமா? காமத்துக்கும் கண் இல்லடா சாமி. மரத்தில் கட்டிவைத்து 20 வயசு இளைஞனுடன் உடலுறவு. கொடூரன் கைது
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, நேற்று அதிரடியாக ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தார். உள்ளாட்சி தேர்தலில் நடந்த குளறுபடிகள் குறித்தும், நகராட்சி மன்ற தேர்தலில் நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார், அதேபோல சசிகலாவுக்கம் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய அவர், சசிகலா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று காலை திடீரென அவர் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: 24 மணி நேரத்தில் ஆதாரத்தை வெளியிடு.. இல்ல, பகிரங்க மன்னிப்பு கேள்.. அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கெடு
எடப்பாடி பழனிச்சாமிக்கு குடலிறக்க பிரச்சனை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில் அது தொடர்பாக இன்று காலை 6:30 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எம்ஜிஎம் மருத்துவமனையில் ரூம் நம்பர் 11 ஆம் அறையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்காக எண்டோஸ்கோப் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் இன்று மதியமே அவர் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.