Asianet News TamilAsianet News Tamil

மழலையர் வகுப்புகளை மூடுவது தவறு... அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!

மழலையர் வகுப்புகளை தொடர்ந்து நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

tngovt should take action to continue kinder garden classes
Author
Tamilnadu, First Published Jun 7, 2022, 4:37 PM IST

மழலையர் வகுப்புகளை தொடர்ந்து நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள 2381 அரசு பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள்  கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.  இந்த சூழலில் தற்போது எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு மாற்றாக அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு , மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

tngovt should take action to continue kinder garden classes

இதுக்குறித்த அவரது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் 2381 அங்கன்வாடிகளை அரசு பள்ளிகளுடன் இணைத்து தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு வராமல் தனியார் பள்ளிகளுக்கு செல்ல அரசே வழிகாட்டுகிறது! எல்.கே.ஜி, யு.கே.ஜி  வகுப்புகளை நடத்துவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை சரி செய்து நடத்துவது தான் அரசின் பணி.  அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால் புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

 

அதை விடுத்து மழலையர் வகுப்புகளை மூடுவது  தவறு! மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் கடந்த பிப்ரவரி மாதம் இட மாற்றம் செய்த போதே அவை மூடப்படும் என்ற செய்தி பரவியது. ஆனால், அப்போது அந்த செய்தியை மறுத்த பள்ளிக் கல்வித்துறை, இப்போது மூட ஆணையிட்டது ஏன்? என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும். மழலையர் வகுப்புகள் ஏழைக் குழந்தைகளுக்கு வரப்பிரசாதம். அவற்றை மூடி அடித்தட்டு மக்களின் கல்வி வாய்ப்பை பறிக்கக்கூடாது. மழலையர் வகுப்புகளை தொடர்ந்து நடத்தவும், அதற்காக பயிற்சி பெற்ற மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios