தமிழக காவல்துறை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை… அண்ணாமலை குற்றச்சாட்டு!!
தமிழகத்தில் சட்டஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக பாஜக போராட்டத்தில் ஈடுபட்டது. அந்த போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கொலை, கொள்ளை என சட்டஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. பாஜக பட்டியலின பிரிவு நிர்வாகி தடா பெரியசாமி வீடு மற்றும் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எங்களின் பட்டியலின பிரிவுத் தலைவர் காரை அடித்து உடைத்ததற்காக வருத்தப்படப்போகும் ஆள் நான் இல்லை.
இதையும் படிங்க: ஓட்டுக்கு பணம்..! ஈரோடு தேர்தலை ரத்து செய்திடுக..! தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார் அளித்த தேமுதிக
கார் உடைந்தால் கட்சி செலவில் சரி செய்து தருவோம். மீண்டும் காரை உடைத்தால் புது கார் வாங்கிக்கொடுப்போம். அதனையும் உடைத்தால் கட்சி செலவில் ஹெலிகாப்டர் வாங்கி கொடுப்போம். நாங்கள் பயப்படும் கட்சி அல்ல. தேசியக்கட்சி. தைரியமாக அரசியல் பணி செய்யக்கூடியது. முதல்வர் எத்தனை நாட்களுக்கு கண்களை மூடிக்கொண்டிருப்பார் என்பதை பார்ப்போம். தமிழக காவல்துறை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை.
இதையும் படிங்க: மெழுகுவர்த்தி போல திமுக ஆட்சி உருக்குலையும்.. கேட்டால் திராவிட மாடல்.? அண்ணாமலை ஆவேசம்
கோவை துப்பாக்கி கலாச்சாரம், கார் வெடிப்பு என தவறு மேல் தவறு நடக்கிறது. திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார். ராணுவ வீரர் கொல்லப்பட்ட சம்பவத்தில் காவல்துறை தனது கடமையை செய்யாமல் இருந்துள்ளது என்று தெரிவித்தார். இதனிடையே படுகொலை செய்யப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரபு குடும்பத்திற்கு பாஜக சார்பில் பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதோடு உயிரிழந்த ராணுவ வீரர் பிரபுவின் இரண்டு குழந்தைகளின் முழு படிப்பு செலவையும் பாஜக ஏற்கும் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.