ஓட்டுக்கு பணம்..! ஈரோடு தேர்தலை ரத்து செய்திடுக..! தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார் அளித்த தேமுதிக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா அதிகளவில் நடைபெறுவதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவிடம் தேமுதிக புகார் மனு அளித்துள்ளது.

DMDK complains to Election Commission demanding suspension of Erode by elections

ஈரோடு தேர்தலில் முறைகேடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, தேமுதிக சார்பாக ஆனந்தன், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா உள்ளிட்ட 77 பேர் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுக சார்பாக 30 அமைச்சர்கள் ஈரோடு தொகுதியில் முகாமிட்டுள்ளனர். அதே போல அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என 100க்கும் மேற்பட்டவர்களை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகங்களை மதவெறி கூடங்களாக மாற்றிய ஆர்எஸ்எஸ்.! மனித குலத்திற்கு எதிரானவர்கள்- சீமான்

DMDK complains to Election Commission demanding suspension of Erode by elections

தேர்தல் ஆணையத்தில் தேமுதிக புகார்

வாக்காளர்களை கவரும் வகையில் பணம் பட்டுவாடா, குக்கர், பட்டுப்புடவை, வெள்ளி கொலுசு உள்ளிட்ட பரிசு பொருட்களை திமுக மற்றும் அதிமுக வழங்கி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியை தேமுதிக வழக்கறிஞர் அணியினர் நேரில் சந்தித்து புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக வழக்கறிஞர் அணியை சேர்ந்த ஜனார்த்தனன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக  தலைமை தேர்தல் அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார். தற்போது ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளதாக கூறினார்.

DMDK complains to Election Commission demanding suspension of Erode by elections

தேர்தலை நிறுத்திடுக

தற்போது உள்ள சூழ்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் எனவும், முறைகேடுகளில் ஈடுபடும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளதாக கூறினார்.  ஈரோடு இடைத் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்பதால் தேர்தலை நிறுத்த வேண்டும் வலியுறுத்தியுள்ளோம். இன்று கொடுத்துள்ள புகார் மனு மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை அனுகுவோம் என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரிக்கை..! தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios