டேன் டீ தேயிலை தோட்டத்தை திட்டமிட்டு முடக்கப்பார்க்கிறது தமிழக அரசு... அண்ணாமலை குற்றச்சாட்டு!!

டேன் டீ தேயிலை தோட்டத்தை திட்டமிட்டு தமிழக அரசு முடக்கப்பார்ப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

tn govt is planning to shut down Tan Tea tea plantation says Annamalai

டேன் டீ தேயிலை தோட்டத்தை திட்டமிட்டு தமிழக அரசு முடக்கப்பார்ப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் வரலாறு காணாத கொடுமைகளை அனுபவித்தவர்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கு இலங்கை அரசு அநீதி இழைத்தது. தற்சமயம் திமுக அரசும் அவர்களுக்கு அநீதி இழைத்திருக்கிறது. திமுக அரசு தேயிலை தோட்ட கழகத்தை திட்டமிட்டு மூட பார்க்கிறது. தமிழக அரசு நிறுவனமான டேன் டீ க்கு சொந்தமான 5315 ஏக்கர் நிலத்தை, அரசு உத்தரவு மூலம், வனத்துறைக்கு வழங்கி, அங்குள்ள தாயகம் திரும்பிய மக்களை இரண்டாவது முறையாக அகதிகளாக்கும் செயலை அரசு செய்கிறது.

இதையும் படிங்க: 100 நாட்களில் 50,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும்..! செந்தில் பாலாஜி உறுதி

இங்குள்ள தனியார் எஸ்டேட்டுகள் லாபமாக இயங்கும் போது, டேன் டீ நஷ்டத்தில் இயங்க ஆட்சியாளர்களே காரணம். அரசு தேயிலை தோட்ட கழகத்தை எங்களால் நடத்த முடியவில்லை என தமிழக முதல்வர் எழுதிக் கொடுத்தால், அதனை ஏற்று நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஒரு லட்சம் கோடி கடனில் இயங்கும் மின்வாரியத்தை தமிழக அரசு நடத்தக்கூடிய சூழ்நிலையில், வெறும் 211 கோடி கடனில் இயங்கும் டேன் டீ நிறுவனத்தை மட்டும் மூட முயற்சிப்பது ஏன்? திமுக அரசு டேன் டீ நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள இழப்பை தொழிலாளர்கள் மீது சுமத்தி அவர்களின் உழைப்பை கொச்சைப்படுத்துகிறது.

இதையும் படிங்க: ஆளுநர்களுக்கு யுஜிசி தலைவர் கடிதம்..! முதலமைச்சர்களை அவமதிக்கும் செயல்..! திருமாவளவன் ஆவேசம்

தமிழகத்தில் உள்ள அனைத்து பொது நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு மாத சம்பளம் வழங்கக்கூடிய நிலையில், டேன் டீ தொழிலாளர்களுக்கு மட்டும் ஏன் தின சம்பளம் வழங்கப்படுகிறது. எங்கும் கொள்ளை, எதிலும் கொள்ளை' என்பதே தி.மு.க., .அரசின் சாதனை. டான் டீயை தனியாருக்கு விற்பதே நோக்கம். டேன் டீ டீ தூளை அரசு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தால் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். டேன் டீ மக்களுக்கு தாமான வீடு கட்டி தர வேண்டும். தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்க வேண்டும். 2024 நீலகிரி பாஜக வசம் வரும். அப்போது இப்பகுதியின் நிலப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனையும் தீர்க்கப்படும் என்று தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios