Agnipath : அக்னிபத் புரட்சிகர திட்டம்..நிறைய பேர் சதி செய்கிறார்கள், உஷார் ! ஆளுநர் ஆர்.என் ரவி எச்சரிக்கை
Agnipath Protest : அக்னிபாத் திட்டத்தை தவறான வழிகாட்டுதலில் ஒரு சிலர் தவறான வழிகாட்டுதலில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் எதிர்த்து வருகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலர் செயல்பட்டு வருகிறார்கள்.
அக்னிபத் போராட்டம்
ராணுவம், கடற்படை, விமானப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் அக்னிபத் என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. நான்கு ஆண்டுகள் முடிந்ததும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்தவர்களில், 75 சதவிகிதம் பேர் பாதுகாப்பு படையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு அறிவித்துள்ள இந்த அக்னிபத் திட்டத்திற்கு எதிராக வட மாநிலங்கள் முழுவதும் பெரும் போராட்டமும் கலவரங்களும் வெடித்து வருகின்றன.
இதன் காரணமாக பல இடங்களில் ரயில்களுக்கு தீவைப்பு சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. வட இந்தியாவில் நடந்த இந்த போராட்டம் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் வரையிலும் பரவியுள்ளது. விவேகானந்தா கேந்திரம் சார்பில் விடுதலை போராட்ட வீரர் வ.உ சிதம்பரனாரின் 150வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி தூத்துக்குடி காமராஜர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.
இதையும் படிங்க : அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வாழ்க.!! ஓபிஎஸ் ஆப்சென்ட்..தொடரும் ஒற்றை தலைமை சர்ச்சை !
ஆளுநர் ஆர்.என் ரவி
அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, ‘வ.உ.சி வசதியான வாழ்க்கை வாழ்வதற்கு வாய்ப்பு இருந்த போதும் எளிமையான வாழ்வை தேர்ந்தெடுத்தார். சிதம்பரனார், விவேகானந்தர், பாரதியார் இவர்களின் பார்வையில் தேசத்தின் மீதும் ஒன்றாகவே இருந்தது. நாடு வளர்ச்சி அடைய வ.உ.சி போன்றவர்களின் வரலாற்றை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டும். தேவையற்ற வரலாறுகளை சொல்வதை தவிர்க்க வேண்டும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகமாக இருந்தபோதும் இந்தியா 150 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்து பிறரின் துன்பத்தில் உதவியுள்ளது.
அக்னிபாத் திட்டம்
இளைஞர்களின் எதிர்காலத்தில்தான் நாட்டின் வளர்ச்சி உள்ளது. அரசால் மட்டும் நாட்டின் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது. ஒரே பாரதம் உன்னத பாரதம் தற்சார்பு பாரதம் என்பது நமது முழக்கமாக இருக்க வேண்டும். ‘அக்னிபாத்’ திட்டம் புரட்சிகரமான திட்டம். இத்திட்டம் 4 ஆண்டுகளில் இளைஞர்களின் நிலையை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றும். இளைஞர்களின் தன்னம்பிக்கையையும், சுய ஒழுக்கத்தையும் இந்தத் திட்டம் மேம்படுத்தும். 21 வயதில் இளைஞர்களின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த இத்திட்டம் உதவும்.
திட்டத்தில் பணியாற்றி வெளியே வருபவர்களுக்கு அரசிலும், தனியார் துறையிலும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். அக்னிபாத் திட்டத்தை தவறான வழிகாட்டுதலில் ஒரு சிலர் தவறான வழிகாட்டுதலில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் எதிர்த்து வருகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலர் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களின் சதித் திட்டத்தை முறியடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க : ADMK : அதிமுக வீழ்ந்தது யாரால் தெரியுமா ? முற்றும் இபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் - இதுதான் காரணமா ?