ஆண்டவா தமிழ்நாட்டில் மழை பெய்யணும்...!! மழைக்காக ஏழுமலையானை வேண்டிய முதல் முதலமைச்சர் எடப்பாடி...
அப்பா ஏழுமலையானே தமிழகத்தில் மழை பெய்யணும், விவசாயிகள் எல்லோரும் நல்லா இருக்கணும் என திருப்பதிக்கு சென்று முதல் முதலாக பிரார்த்தனை செய்துள்ளார். தமிழக முதல்வர் பழனிச்சாமி .
நடந்து முடிந்த தேர்தல் ரிசல்ட் தமிழகத்திலும் சரி, மத்தியிலும் சரி சுவாரஷ்யம் குறைவு தான், தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக பிஜேபி கூட்டணி படு தோல்வியை சந்தித்தாலும், பல குழப்பமான டிவிஸ்ட் இருந்தது. அதாவது திமுக கூட்டணி அபாரமான வெற்றியை சந்தித்தாலும், இடைத்தேர்தலில் அதிமுக ஆட்சியை கவிழ்க்க தேவையான தொகுதிகள் கிடைக்கவில்லை, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் ஓபிஎஸ் மகன் வென்றது. மத்தியில் பிஜேபி மீண்டும் அசுர பலத்தோடு ஆட்சியில் அமர்வது, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 எம்.எல்.ஏ-க்களின் பரிதாப நிலை என இந்த தேர்தல் முடிவு மொத்தமும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அமைந்தது.
இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இடைத்தேர்தலில் 9 எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க.வுக்கு கிடைத்துள்ளனர். இதனால்தான் குடும்பத்துடன் இன்று திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் மதியம் திருமலைக்கு வந்தார். ஸ்ரீ கிருஷ்ணா விருந்தினர் மாளிகைக்கு வந்த அவரை தேவஸ்தான துணை செயல் அலுவலர் பாலாஜி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி திருமலையில் இரவு வராகசாமி, ஹயக்ரீவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். நேற்று காலை அஷ்டதள பாதபத்ம ஆராதனை சேவையில் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபட்டார். அவருக்கு லட்டு, தீர்த்த பிரசாதங்களை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்திருக்கின்றேன். ஏழுமலையானை தரிசனம் செய்தாலே தமிழகம் வளம் பெரும் தமிழ்நாட்டு மக்கள் எல்லா வளங்களையும் பெற்று வாழ எல்லாம் வல்ல ஏழுமலையானை தரிசனம் செய்திருக்கின்றேன். தற்போது தமிழகத்திலேயே வறட்சி நிலை நிலவி இருக்கிறது போதிய மழை இல்லாததால் ஏரிகள், குளங்கள் வறண்டு இருக்கின்றன. ஏழுமலையானை தரிசனம் செய்கின்ற பொழுது, தமிழகத்தில் பருவமழை பொழிந்து அணைகள், ஏரிகள் குளங்கள் என நீர் நிலைகள் நிரம்பி வேளாண் பெருமக்களுக்கு பாசனத்துக்கு நீர் தேவை என எல்லாம் வல்ல ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளேன். எனவே ஏழுமலையானை தரிசனம் செய்துள்ள போது அனைத்து வளங்களையும் கொடுப்பர் என நானும் தரிசனம் செய்துள்ளேன்.
தற்போது நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 இடத்தில் வெற்றி பெற்று 122 இடங்களுடன் பெரும்பான்மை பெற்றுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசுக்கு இருந்த பெரும்பான்மை குறைவிற்கான சிக்கல் இடைத்தேர்தல் முடிவால் தீர்வு காணப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.