கரன்சி பாலிடிக்ஸ் கலாச்சாரம் பற்றி திமுக பேசலாமா.? திமுகவை பொளந்து கட்டிய பாஜக !

திமுக எதிர்ப்பார்ப்பது தான் ஆட்சியில் இருக்கும் போது ஆளுநர் தன் கடமையைச் செய்யாமல் வெறும் அலங்காரப் பொதுமையாக இருப்பதையே  விரும்புகிறது என்று கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார் பாஜகவை சேர்ந்த வி.பி.துரைசாமி.

Tn bjp vice president vp duraisamy reply to dmk congress politics

பாஜக மாநிலத்துணைத் தலைவர் வி.பி.துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கரன்சி பாலிடிக்ஸ் கலாச்சாரம் பற்றி திமுக பேசலாமா? ஜனநாயகச் சந்தையிலே நீண்ட காலமாக வாணிபம் செய்யும் திமுகவின் மந்தையினில் ஒருவரான நாடாளுமன்றக் குழுத்தலைவர்டி.ஆர்.பாலு  அவர்கள் கடந்த சில தினங்களாக முரசொலியில் எழுதுகிறார்.

பாஜக - வி.பி.துரைசாமி:  

ஜனநாயகம் சந்தையல்ல மக்கள் பிரநிதிகள் மந்தையல்ல, பாஜகவால் நாட்டுக்கு ஆபத்து என்று பேசுகிறார். பல ஆண்டு காலமாக பாஜகாவை நோட்டா கட்சி என்று விமர்சித்து வந்தது. ஆனால், இன்று  திமுகவின் முரசொலியில் தலையங்கம் முதல் கடைசி பக்கம் வரை பிஜேபி குறித்த செய்தி இல்லாமல் இருப்பதில்லை. தமிழகத்தில் காலூன்றவே முடியாது இது பெரியாரின் மண், அண்ணாவின் மண் என்றெல்லாம் ஆர்ப்பரித்த திமுக, இன்று பாஜகவை தவிர்த்து விட்டு அரசியல் செய்ய முடியவில்லை என்பதற்கு முரசொலியே முழுமையான சாட்சி.

Tn bjp vice president vp duraisamy reply to dmk congress politics

இதையும் படிங்க.பாலிகிராப் சோதனை! ராமஜெயம் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கும் காவல்துறை.. சிக்குவார்களா ?

காங்கிரஸ் கூட்டணி:

60, 65 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியோடு பல்வேறு சமயங்களில் கூட்டணி வைத்து அமைச்சரவையில் பங்கெடுத்திருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தன் அதிகாரத்தை திமுக ஆதரவுடன் துஷ்பிரயோகம் செய்திருக்கிறது. இந்தியா முழுமையும் பலமுறை ஆட்சியை மாநில ஆட்சியைக் காங்கிரஸ் கலைத்திருக்கிறது. அப்போதெல்லாம் .  ஜனநாயகம் சந்தையல்ல மக்கள் பிரநிதிகள் மந்தையல்ல, காங்கிரசால் நாட்டுக்கு ஆபத்து, என்று திமுக அலறவில்லை.

திமுக அரசு: 

இதில் திமுகவே காங்கிரசால் பாதிக்கப்பட்டிருக்கிறது, அப்போது மட்டும் புலம்பியிருக்கிறது திமுக. ரைட் டு ரீ கால் என்ற பதம் தற்போது புதிதாக ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது அதை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு முயற்சிக்கிறது. தமிழக ஆளுனரை மாற்றுவதற்காக திமுக செய்யும் இந்த முயற்சி  இது சட்டத்தை ஏமாற்றுகிற வேலை. கவர்னரை மாற்றுகிற தங்கள் முடிவுக்கு சாதகமாக தங்கள் கூட்டணி கட்சியினரை துணைக்கு அழைத்துக் கொண்டு திமுக குரல் கொடுக்கிறது.

ஆளுநர் Vs திமுக:

திமுகவால் கிடைக்கும் பலன்களை கருதி கூட்டணி கட்சியினரும் கண்மூடித்தனமாக அரசியல் சட்டத்திற்கு புறம்பாக அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுகிறது. திமுக மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் போது நம் மாநிலத்தில் ஆளுநர் இருக்கலாமா இல்லையா என்று திமுக முடிவு எடுத்ததா?  திமுக எதிர்ப்பார்ப்பது தான் ஆட்சியில் இருக்கும் போது ஆளுநர் தன் கடமையைச் செய்யாமல் வெறும் அலங்காரப் பொதுமையாக இருப்பதையே  விரும்புகிறது. தமிழகத்தில் இப்போது தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது.

வெள்ள பெருக்கெடுத்து நீரோடுகிறது ஆயிரக்கணக்கான கோடிகள் வெள்ளநீர் வடிகாலுக்காக செலவிடப்பட்டுள்ளது ஆனாலும் தொடர்ந்து வெள்ளம் தலைநகரை சூழ்ந்து கொண்டிருப்பதால், ஆளுனர் நடவடிக்கை எடுக்க முற்பட்டால் அலறுகிறது திமுக. கவர்னர் வேலை பார்க்கிறார் என்றால் மேலும் திமுகவுக்கு கோபம் வருகிறது. நீட் தேர்வு ரத்து செய்கிறேன் இன்று சவால் விட்ட திமுக தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறது ? மக்களை ஏமாற்ற முடியுமா ?

இதையும் படிங்க.அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான் தான்.. எடப்பாடி பேசினால் நான்..! முடிச்சு போட்ட ஓபிஎஸ் !

Tn bjp vice president vp duraisamy reply to dmk congress politics

திமுக ஆட்சி:

துணைவேந்தர் நியமனங்களில் தகுதியோ திறமையோ அடிப்படையாக வைக்காமல், கவனிப்பு தொகையை மட்டும் கருத்தில் எடுத்துக் கொண்டு துணைவேந்தர்களை நியமனம் செய்ததால்தான் பல்கலைக்கழகங்களின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதை மாற்ற முயற்சி செய்கிறார் கவர்னர். அது திமுகவுக்குப் பிடிக்கவில்லை. கல்வியில் அரசியல் கலக்கக்கூடாது என்றாலும், திமுக ஆட்சியில் கல்வியும் அரசியலும் பின்னிப்பிணைந்து நடக்கிறது.

நீதிமன்றத்தில் மக்கள் மன்றத்திலும் செல்லுபடியாகாத வாதத்தை திமுக முன்னெடுக்கிறது. இதுவரை பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக் காலத்தில் எந்த அரசையும் கலைத்ததில்லை. மாநில அரசைக் கலைக்க விருப்பம் இல்லாமல் தன் ஆட்சியை விட்டுக் கொடுத்த கட்சிதான் பாஜக. மாநில அரசுக்கு பாஜகவை விட மிகச்சிறந்த பாதுகாப்பாளராக எந்த ஆட்சியும் மத்தியில் இருந்ததில்லை.  வளர்ச்சியையும் தேசத்தின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, தானாக விரும்பி பாஜகவை நோக்கி முன்வரும் எவரையும் கட்சியில் சேர்ப்பதில் தவறு இல்லை.

கரன்சி பாலிடிக்ஸ்:

ஆனால், கரன்சி பாலிடிக்ஸ் கலாச்சாரம் பற்றி திமுக பேசலாமா? அதுவும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியில் அனைத்து முடிவுகளும் கரன்சிகளால் மட்டும் எடுக்கப்படும் போது, கரன்சி பாலிடிக்ஸ் கலாச்சாரம் பற்றி திமுக பேசலாமா? கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை எத்தனை அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவிற்குத் தாவினர் என்ற கணக்கை மட்டும் திரு டி ஆர் பாலு அவர்கள் சொன்னால் போதும், யார் கரன்சி பாலிடிக்ஸ் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு விளங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க.முடி கொட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்த இளைஞர்.. மருத்துவர் தான் காரணம் - அதிர்ச்சி தகவல்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios