Asianet News TamilAsianet News Tamil

மு.க.ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்கணும்.. தயாநிதி மாறன் விவகாரத்தில் நெருக்கடி கொடுக்கும் தமிழக பாஜக தலைவர்!

“தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் அரசுகள் கூறிவருகின்றன. ஆனால், எதிர்கட்சி தலைவர் ‘ஒன்றிணைவோம் வா’ என ஒரு லட்சம் மனுக்களை மக்களிடம் வாங்கியுள்ளார். அதை எடுத்துச் சென்று தலைமை செயலாளர் அறையில் போட்டுவிட்டு, வெளியே வந்து செய்தியாளர்களிடம் தங்களை மூன்றாம் தர மனிதரை போல நடத்தியதாக தயாநிதி மாறன் பேட்டி கொடுக்கிறார். ஊரடங்கு நேரத்தில் இவ்வளவு மனுக்களை எப்படி பெற்றார்கள் என எனக்குத் தெரியவில்லை."

TN Bjp Leader says that M.K.Stalin should be ask apology
Author
Chennai, First Published May 20, 2020, 9:25 PM IST

தயாநிதி மாறன் பேசிய விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.TN Bjp Leader says that M.K.Stalin should be ask apology
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது பாஜக நிர்வாகி கரு. நாகராஜன் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை சர்ச்சையாக விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கெள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எல்.முருகன், “பாஜக பெண்களை மதிக்கும் கட்சி. டிவி விவாதங்களில் பங்கேற்கும் போது தனி மனித தாக்குதல்களை தவிர்க்க வேண்டும்” என்று பட்டும் படாமல் பதிலளித்தார்.TN Bjp Leader says that M.K.Stalin should be ask apology
திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேச்சு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன், “தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் அரசுகள் கூறிவருகின்றன. ஆனால், எதிர்கட்சி தலைவர் ‘ஒன்றிணைவோம் வா’ என ஒரு லட்சம் மனுக்களை மக்களிடம் வாங்கியுள்ளார். அதை எடுத்துச் சென்று தலைமை செயலாளர் அறையில் போட்டுவிட்டு, வெளியே வந்து செய்தியாளர்களிடம் தங்களை மூன்றாம் தர மனிதரை போல நடத்தியதாக தயாநிதி மாறன் பேட்டி கொடுக்கிறார். ஊரடங்கு நேரத்தில் இவ்வளவு மனுக்களை எப்படி பெற்றார்கள் என எனக்குத் தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் திமுக தலைவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பதில் அளித்தார்.

TN Bjp Leader says that M.K.Stalin should be ask apology
மேலும் எல்.முருகன் கூறுகையில், “இதுவரை தமிழகத்தில் 35 லட்சம் மோடி கிட் வழங்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் முகக் கவசம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் 35 லட்சம் பேருக்கு வழங்கியுள்ளோம், மேலும் 1 கோடி பேருக்கு வழங்க உள்ளோம். இதற்காக முகக் கவசம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் 1.75 லட்சம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் 21 லட்சம் கோடிக்கு சுய சார்பு திட்டம் உருவாக்கப்பட்டு்ள்ளது. இந்தக் கடினமான சூழலில் எதிர்கட்சிகள் தமிழக அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.” என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios